அல்லாஹ்வின் உதவிகொண்டு கடையநல்லூர் தக்வா
பள்ளியில் 25-05-2015 அன்று காலை 10 மணி முதல் லுஹர் வரை இஸ்லாமிய பல் சுவை
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் பஷீர் அஹமத்
உமரீ அவர்கள் தலைமை தாங்கினார்கள் அதனைத் தொடர்ந்து சகோதரர் முஹிப்புல்லாஹ்
உமரீ அவர்கள் ஈமானில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில சகோதரர்களை
நான்கு பிரிவாக பிரித்து 1.தக்வா 2.தவ்பா 3 இக்லாஸ் 4.இஹ்சான் என்று நான்கு பிரிவாக பிரித்து
குவிஸ் (இஸ்லாமிய வினாடி வினா) நடத்தப்பட்டது.
நான்கு பிரிவுகளும் சரியாக பதில் சொன்னது
மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதியில் சகோதரர் எஸ்.எஸ்.யூ சைபுல்லாஹ்
ஹாஜா அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்கள். துஆ உடன் நிகழ்ச்சி
இனிதே முடிவுற்றது.







0 comments:
Post a Comment