بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நபிவழியில் ஹஜ் உம்ரா விளக்கக் குறிப்புகள்

                                                                                 தொகுப்பு : முஹிப்புல்லாஹ் உமரி
நபிவழியில் உம்ரா விளக்கக் குறிப்புகள்
அல்லாஹ்விற்காக ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் : அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2:196)
உம்ராவிற்கான நற்கூலி
உம்ராவிற்கான நற்கூலி உனது சிரமத்திற்கோ பொருட்செலவுக்கோ தக்கவாறு தான் கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1787)
உம்ராவின் சிறப்பு
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1773)
ரமலானில் உம்ரா செய்வதின் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1782)
உம்ராவின் கிரியைகள் என்னென்ன?
நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் ஆடை அணிந்து கொண்டு மக்கா) வந்ததும் இறையில்லம் கஃஅபாவை ஏழு முறை தவாப் செய்து விட்டு (பின்) மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ஸஃபா மர்வாவுக்கு இடையே ஏழு முறை சஃயு செய்து விட்டு முடியை மழித்தோ அல்லது குறைத்துக் கொண்டோ இஹ்ராமிலிருந்து விடுபடுவார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி) (ஹதீஸ்களின் தொகுப்பு சுருக்கம்)
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
மதினாவாசிகளுக்கு துல்ஹுலைஃபா இடத்தையும் ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம் இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1524)
குறிப்பு : துல்ஹுலைஃபா மக்காவுக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜுஹ்ஃபா மக்காவுக்கு வடக்கே 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கர்னுல் மனாஸில் மக்காவுக்கு கிழக்கே 94 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யலம்லம் மக்காவுக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. (இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம் வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்)
இஹ்ராமுக்கு முன்பு பேண வேண்டியவைகள்
அக்குள், மர்மஸ்தான முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மீசையை கத்தரிப்பது, குளிப்பது, உடலுக்கு நறுமணம் பூசிக் கொள்வது.
இஹ்ராம் அணியும் முறை
இஹ்ராம் அணிவதற்கான எல்லைகள் வந்ததும் இஹ்ராமிற்கான ஆடையான தைக்கப்படாத ஒரு (வெள்ளை) வேட்டியும் ஒரு மேலே போர்த்திக் கொள்ளும்
அல்லாஹ்விற்காக ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் : அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2:196)
உம்ராவிற்கான நற்கூலி
உம்ராவிற்கான நற்கூலி உனது சிரமத்திற்கோ பொருட்செலவுக்கோ தக்கவாறு தான் கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 1787)
உம்ராவின் சிறப்பு
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1773)
ரமலானில் உம்ரா செய்வதின் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1782)
உம்ராவின் கிரியைகள் என்னென்ன?
நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் ஆடை அணிந்து கொண்டு மக்கா) வந்ததும் இறையில்லம் கஃஅபாவை ஏழு முறை தவாப் செய்து விட்டு (பின்) மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ஸஃபா மர்வாவுக்கு இடையே ஏழு முறை சஃயு செய்து விட்டு முடியை மழித்தோ அல்லது குறைத்துக் கொண்டோ இஹ்ராமிலிருந்து விடுபடுவார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி) (ஹதீஸ்களின் தொகுப்பு சுருக்கம்)
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
மதினாவாசிகளுக்கு துல்ஹுலைஃபா இடத்தையும் ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம் இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு  (வெள்ளை) துணியொன்றையும் அணிய வேண்டும். பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தாத எந்த துணியானாலும் (இஹ்ராமிற்காக) அணிந்து கொள்ளலாம். இஹ்ராமிற்காக (ஆடையை) அணிந்த பின்பு லப்பைக்க உம்ரதன் என்று கூறிய பின்பு கஃஅபா சென்று முதல் தவாப் செய்யத் தொடங்கும் வரை கீழ்காணும் தல்பியாவை அதிக அதிகமாக சப்தமிட்டு ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும் தல்;பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்: ஹாகிம், பைஹகீ)
தல்பியாவின் வாசகம்
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க், லா ஷரீக்க லக்.
பொருள்: அல்லாஹ்வே! உன் அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன் அழைப்பை ஏற்று வந்தேன். புகழனைத்தும் உனக்கே. அருட்கொடையும் அரசாட்சியும் உன்னுடையது. உனக்கு எவ்வித துணையுமில்லை.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1549)
இஹ்ராம் அணிந்துள்ளவர் செய்யக் கூடாதவைகள்
1.             திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. (ஆதாரம்: முஸ்லிம் 2522)
2.             மனைவியுடன் இல்லறக் காரியத்தில் ஈடுபடக்கூடாது. (அல்குர்ஆன் 2:197)
3.             வீணான விவாதங்கள், சண்டை சச்சரவு, தீய பேச்சுக்கள் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது.
4.             ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் தவிர மற்றவற்றை வேட்டையாடுவதும், தமக்காக பிறரை வேட்டையாடுமாறு தூண்டவும் கூடாது. (அல்குர்ஆன் 5:94,95,96)
5.             நறுமணம் உடலுக்கோ, தலைக்கோ, ஆடைக்கோ பூசுவது கூடாது. (ஆதாரம்: புகாரி 1266)
6.             தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது கூடாது. வேயில், மழையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குடை பிடிப்பதில் தவறில்லை.(ஆதாரம்: புகாரி 1265)
7.             உடலில் உள்ள முடிகளையும், நகங்களையும் வேண்டுமென்று வெட்டுவது கூடாது. (ஆதாரம்: புகாரி 1314, முஸ்லிம் 3653)
8.             ஆண்கள் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் காலுறை அணியக்கூடாது. செருப்பு இல்லையெல் கரண்டைக்குக் கீழே இருக்கு மாறான காலுறைகளை அணியலாம். (ஆதாரம்: புகாரி 134,366)
9.             இஹ்ராம், இஹ்ராமல்லாத எந்நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவது தவறி விடப்பட்ட பிறர் பொருட்களை எடுத்தல் கூடாது.(ஆனால் தவறிவிடப்பட்ட பொருளை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் அதை விளம்பரம் செய்வதற்காக எடுக்கலாம்)
10.           முஸ்லிம்களுக்கு சொல், செயல் இவற்றால் எவ்வித கஷ்டமும் கொடுக்கக் கூடாது.
11.           இஹ்ராமுடைய நிலையில் பெண்கள், கையுறைகளைப் பயன்படுத்தக் கூடாது. முகத்தையும் மறைக்கக்கூடாது. (ஆதாரம் புகாரி 1838)
குறிப்பு : ஹரமின் எல்லைப் பகுதிகளாவன
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
·         மக்காவுக்குத் தெற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்யீம் என்ற இடம்.
·         மக்காவுக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அளாஹ் என்ற இடம்.
·         மக்காவுக்கு கிழக்கே 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜியிர்ராணா என்ற இடம்.
·         மக்காவுக்கு வடமேற்கே 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாதீநக்லா என்ற இடம்.
·         மக்காவுக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹுதைபிய்யா என்ற இடம்.
உம்ராவின் செய்முறை விளக்கம்
இஹ்ராம் அணிய வேண்டிய எல்லையில் இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃஅபாவை தவாப் செய்யத் துவங்கும் முன் வரை தல்பியாவை சப்தமாக கூற வேண்டும்.
ஹரம் ஷரீஃப் (கஃஅபா) பள்ளியினுல் நுழையும் போது கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்ம(த்)திக்க.
பொருள் : அல்லாஹ்வே! உன் அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!
குறிப்பு : இந்த துஆவை எந்த பள்ளியினுள் நுழைந்தாலும் ஓதிக் கொள்ள வேண்டும்.
கஃஅபத்துல்லாஹ் ஆலயத்தினுல் மேற்கூறிய துஆவை ஓதிய பின்பு கஃஅபாவை தவாப் செய்ய வெண்டும். கஃஅபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாப் ஆகும். தவாப்பிற்கு முன்பே உளூச் செய்து கொள்வது சிறப்பு. தவாப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலாமுர்ரா (ரலி) அறிவிக்கிறார்.
(நூல்: திர்மிதி 787.)
கஃஅபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாப் செய்யும் போது ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து பிஸ்மில்லாஹி வல்லாஹுஅக்பர் எனக் கூறி துவக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேலமர்ந்து கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் தமது கையிலுள்ள ஏதேனும் ஒன்றைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கி சைகை செய்துவிட்டுத் தக்பீரும் சொல்வார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 1632)
மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளதாவது
...நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டு பிஸ்மில்லாஹி வல்லாஹுஅக்பர் என்று கூறி தவாஃபைத் தொடங்கினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அஹ்மத் 4400)
நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாப் செய்தார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2213)
ஹஜருல் அஸ்வதை (முடியுமானால்) முத்தமிட்டோ அல்லது தொட்டு முத்தமிட்டோ அல்லது அதற்கும் இயலாவிட்டால் சைகையின் மூலம் முத்தமிட்டுக் கொண்டு கஃஅபா நமது இடது கைப்பக்கம் இருக்குமாறு வைத்துக் கொண்டு தவாப்பை (சுற்றை) ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தை அடைந்தால் ஒரு சுற்று நிறைவேறும். உங்களால் முத்தமிடாமல் போனாலும் தவாப்பில் எந்த குறையும் ஏற்படாது. இவ்வாறு ஏழு முறை சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றும் போது ஹிஜ்ர் இஸ்மாயில் பகுதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் கஃஅபாவின் நான்கு மூலைகளில் யமானி எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 166)

மேலும் ருக்னுல் யமானி என்ற இடத்திற்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் வரும் போது
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வ(க்)கினா அதாபன்னார்.
பொருள்: யா அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் நன்மையைதா. மேலும் நரக வேதனையை விட்டு எங்களை காப்பாற்றுவாயாக.
(அல்குர்ஆன் 2:201)
குறிப்பு: நடந்து தவாப் செய்ய இயாலாவிட்டால் வாகனத்தின் மீது அமாந்து தவாப் செய்யலாம்.
 (ஆதாரம்: புகாரி 4641)
தவாபின் போது மேற்கூறிய துஆ திக்ர் தவிர வேறொன்றும் (துஆ) இல்லை.
தவாப் செய்து முடித்தவுடன் (மகாமே இப்ராஹீம்) இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம் என்ற இடத்தை நோக்கி வரும் போது வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா (மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற 2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத் தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்கு சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு ஸஃபாவுக்கு சென்றார்கள்.
 (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 237)
குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுவார்கள். (முடிந்தால் தொட்டு முத்தமிடலாம் கட்டாயமில்லை.) பின்னர் ஜம்ஜம் நீரை அருந்துவார்கள். (ஸம்ஸம் நீர் அருந்துவது விரும்பத்தக்கது) அதன் பின்னர் ஸஃபாவை நோக்கி செல்வார்கள்.
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாப் செய்யக் கூடாது. எனவே மாதவிடாய் நின்ற பின் உம்ராவை மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.
ஸஃபா, மர்வா எனும் இரு மலை குன்றுகளுக்கிடையே ஸயிச் (ஓடுவது) செய்தல்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தமது தவாபை முடித்து (மகாமே இப்ராஹீம் அருகே) இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸஃபா, மர்வாக்கு இடையே ஓடினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 1616)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை வந்தடைந்ததும் இன்னஸ் ஸஃபா வல் மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ் (ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும் என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள்.அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃஅபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி..
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு,லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா.
பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. ஆவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்! அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவினான்.அவன் ஒருவனே எதிரிக் கூட்டத்தினரைத் தோல்வியுறச் செய்தான். என்று கூறி இறைவனபை; பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடைவ கூறினார்கள். அவற்றுக்கிடையே (விரும்பிய) துஆ செய்தார்கள்.பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) பத்னுல் வாதி என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137)
குறிப்பு: பத்னுல் வாதி என்ற இடத்தை குறிக்க இன்று பச்சை விளக்கு உள்ள எல்லையிலிருந்து அடுத்த பச்சை விள்க்கு உள்ள வரை ஓடிச் செல்ல வேண்டும்.
ஏழு சுற்றிலும் ஸஃபா மர்வா செல்வது ஒரு சுற்று ஆகும். பிறகு மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு செல்ல வேண்டும். இது மற்றொரு சுற்றாகும். இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும்.
இறுதியாக இஹ்ராமிலிருந்து விடுபடும் முன் தலை முடியைக் குறைத்தோ அல்லது மழித்தோ விடுபட வேண்டும்.
அல்லாஹ்வே! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக! ஏன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது நபித்தோழர்பள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வே! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைததுக் கொள்பவர்களையும் என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக) என்று கூறினார்கள்.

ஹஜ் செய்வதின் சிறப்புகள்
...ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: புகாரி)
உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
ஹஜ் செய்வதின் அவசியம்
அந்த (கஅபா) ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை)மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விடடும் (தேவையற்றவன்)                                      (அல்குர்ஆன் 3;:97)
அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும், உம்ராவும் என்று விடையளித்தார்கள்.
                  (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அஹ்மத், இப்னுமாஜா 2892)
ஹஜ்ஜின் வகைகள் மூன்று
1.       தமத்துஃ,
2.      கிரான்,
3.      இஃப்ராத்
ஹஜ் தமத்துஃ
ஹஜ்ஜின் மாதங்களான (ஷவ்வால், துலகஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்) (ஆதாரம்: புகாரி)இக்காலகட்டங்களில் இஹ்ராம் கட்டுவதற்குரிய எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம்கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக லப்பைக் ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு ஹஜ் தமத்துஃ என்று கூறுவர். இந்த ஹஜ்ஜை செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டும்.
ஹஜ் கிரான்
கிரான் எனில் சேர்த்துச் செய்தல் என்று பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம்கட்ட வேண்டிய இடத்தல் ஒருவர் இஹ்ராம் கட்டும போது லப்பைக் ஹஜ்ஜதன் வஉம்ரதன் என்று கூறி ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தடவை இஹ்ராம் அணிவார். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் தவாஃபுல் குதூம் (மக்கா வந்தவுடன் முதலில் தவாஃப்) செய்து விட்டு பிறகு இஹ்ராமை களையாமல் துல்ஹஜ் எட்டம் நாளிலிருந்து ஹஜ்ஜுடைய கிரியைகளை செய்வார். இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராக கருதப்படுவார். இவர் ஹஜ்ஜுக்காக குர்பானி கொடுக்க வேண்டும்.
ஹஜ் இஃப்ராத்
இஃப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்று பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம்கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக் ஹஜ்ஜன் எனக் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ் கிரியைகளை செய்வார். ஹஜ் செய்து முடித்த பிறகு விரும்பினால் உம்ரா செய்யலாம். இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.
மினாவிற்கு செல்வது

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர்,மக்ரிப் , இஷா ஆகிய தொழுகைகளையும் துல்ஹஜ் மாதம் ஓன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். மினாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரத்அத்களாக தொழ வைத்தார்கள். (நூல்: புகாரி 1653)
குறிப்பு: துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அதில் ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கிரியைகளை அவர்கள் விளக்கினார்கள்.
அரஃபாவிற்கு செல்வது

ஒன்பதாம் நாளின் சுப்ஹுத் தொழுகையை மினாவில் முடித்து சூரியன் உதயமாகும் வரை அங்கேயே தங்கி விட்டு பின்பு அரஃபாவுக்கு புறப்பட வேண்டும். மினாவிலிருந்து அராஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும் தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.
நானும் அனஸ்(ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்கு சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அனஸ்(ரலி) அவர்கள் தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை என்று விடையளித்தார்கள்.                                                (நூல்: புகாரி 970)
ஒன்பதாம் நாளில் ஒருவர் அரஃபாவில் சிறிது நேரமேனும் தங்க வேண்டும். இல்லையெனில் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாது. ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான்.
பத்தாம் இரவின் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: நஸயீ 2966, திர்மிதி)
அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138)
குறிப்பு: அரஃபா நாளான ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.
(நபிமொழி பார்க்க புகாரி 1658)
ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி எனினும் மறுநாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடிவிடும்.
அரஃபாவில் செய்ய வேண்டியவை
நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்கள் பின்னே(ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
(நூல்: நஸயீ 2961)
நபி (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள் . பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
(நூல்: முஸ்லிம் 3179)
குறிப்பு: லுஹர்,அஸர் தொழுகைகளை ஜம்வு (சேர்த்து),கஸர் (சுருக்கி) செய்து தொழ வேண்டும். அதற்கு முன்பாக நிகழ்த்தப்படும் உரையை செவிமடுக்க வேண்டும்.
முஸ்தலிஃபாவுக்கு செல்வது

நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் (ஜம்வு, கஸராக) தொழுதார்கள். அவ்விரண்டிற்கும் இடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
மீண்டும் மினாவுக்கு செல்வது
முஸ்தலிஃபாவில் பஜ்ரு தொழுததும் கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு என்று கூறி) அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப் ) புறப்பட்டார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
ஸவ்தா(ரலி) அவர்கள் பருமனாகவும், விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவுக்கு) புறப்பட்டுச் செல்ல நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி அளித்தார்கள்.
(நூல்: புகாரி 1681)
குறிப்பு: பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும். இருப்பினும் பலவீனர்கள் பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்கு சென்று விடலாம்.
மினாவில் செய்ய வேண்டியவை
இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான்.ஜம்ரத்துல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு ஜம்ரத்துல் உஸ்தா எனுமிடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு ஜம்ரத்துல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். (பைஹகீ, ஹாகிம்)
அதை நினைவு கூறும் விதம் அதை நாமும் அப்படியே ஏற்போம் எந்த விதமான ஷைத்தானின் தூண்டுதலுக்கும் பலியாக மாட்டோம் என்பதை பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்தள்ளன.
ஜம்ரத்துல் அகபா

துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரத்துல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும்.
(நூல்: புகாரி 1687)
ஒவ்வொரு கல்லையும் எறியும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூற வேண்டும்
(நூல்: புகாரி 1750)
எறியப்படும் கற்கள் வில்களால் (சுண்டி) விளையாடும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும். (நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு (பத்னுல் வாதி எனுமிடத்திலிருந்து) கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை. விரட்டுதல் இல்லை. வழிவிடு, வழிவிடு என்பது போன்ற கூச்சல் இல்லை.
(நூல்: நஸயீ 3011, திர்மிதி)
கல்லெறியும் போது நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது. யாராக இருந்தாலும் சூரியன் உதயமான பிறகே கல் எறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.
அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும் மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டு மகனே சந்திரன் மறைந்த விட்டதா? என்றார்கள். நான் ஆம்! என்றேன். அப்போது அவர்கள் புறப்படுங்கள் என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரத்துல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுப்ஹு தொழுதார்கள். இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளார்கள் என விடையளித்தார்கள்.
(நூல்: புகாரி 1679)
தலை மழித்தல்
பத்தாம் நாள் அன்று ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். நறுமணம், தைக்கப்பட்ட ஆடை போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மனைவியோடு உடலுறவு கொள்ளக் கூடாது.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்.
(நூல்: அபூதாவூத்)
குறிப்பு: மினாவில் செய்ய வேண்டிய காரியங்களை முன்னால், பின்னால் (மாற்றி, மாற்றி) செய்வதில் தவறேதும் இல்லை.
(நூல்: புகாரி 1738)
தவாஃப் அல் இஃபாளா அல்லது தவாஃப் ஸியாரா
ஹஜ் காரியங்களில் பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். பின்பு மீண்டும் மினாவுக்கு திரும்ப வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளா செய்து விட்டு திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம்)
தவாஃப் அல் இஃபாளாவி (ஹஜ்ஜுடைய தவாஃப்)ன் செய்முறை
இந்த தவாஃபின் போது வலது தோள்புஜம் திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏழு சுற்றுகளிலும் நடந்தே செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.
(நூல்: அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரத்அத் தொழுதார்கள்.
(நூல்: புகாரி)
இதன் பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.
குறிப்பு: இந்த தவாஃப் அல் இஃபாளா செய்து முடித்தவுடன் முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.இப்போது அவர் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்படுகிறது.
(ஆதாரம் நூல்: புகாரி 1562)
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது.
தவாஃபுல் இஃபாளா செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் மாதவிடாய் நின்ற பிறகு தவாஃப் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் பத்தாம் நாள் தான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கல்லெறியும் நாட்களும் இடங்களும்
பத்தாம் நாளன்று ஜம்ரத்துல் அகபாவில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். துலஹஜ் 11,12, 13 ஆகிய மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11,12 ஆம் நாட்களில் மட்டும் கல்லெறிந்து விட்டு திரும்பி விடலாம்.
இந்த நாட்களில் மினாவில் தங்கியிருந்து தினமும் சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்ததும் கல்லெறிய வேண்டிய மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலா (ஜம்ரத்துல் ஊலா அல்லது ஜம்ரத்துஸ் ஸுகுரா) எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு (சிறிய) கல்லுடன் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி சம தரையைத் தேர்வு செய்து கொண்டு கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு ஜம்ரத்துல் உஸ்தா வில் (ஏழு முறை தக்பீர் கூறி) கல் எறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள்.பிறகு பத்னுல் வாதி என்ற இடத்திலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் (ஏழு முறை தக்பீர் கூறி) கல் எறிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிவோம்.
(நூல்: புகாரி)
குறிப்பு: கல்லெறிவதற்காக கட்டாயம் மினாவில் தங்கியிருப்பது நபி வழி எனினும் மக்காவிற்கும் சென்று வரலாம்.
(ஆதாரம் நூல்: புகாரி 1630)
தவாஃபுல் விதா
மினாவில் 11,12,13 ஆம் நாட்களில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதா (விடை பெறும் தவாஃப்) செய்து முடிக்க வேண்டும்.
மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியை (தவாஃபுல் விதா)யான அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டு புறப்படுங்கள் என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்)
குறிப்பு: தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்த தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதை செய்தவுடன் புறப்பட்டு சென்று விடலாம்.
மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதாவை செய்யாமல் ஊருக்கு புறப்படலாம்.
பெண்களுக்கான சட்டம்
ஹஜ்,உம்ரா செய்யும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது? என்று (ஆயிஷா) நான் மக்காவுக்கு சென்றதும் மாதவிலக்கானேன். எனவே நான் தவாஃப் செய்யவுமில்லை. ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு ! உம்ராவை விட்டு விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர்ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். இது அந்த உம்ராவுக்கு பகரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
(ஆயிஷாவே) நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃஅபாவில் தவாஃப் செய்யாதே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது  நம்மை (நமது பயணத்தை) அவர் தடுத்து விட்டாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தவாஃபுல் இஃபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது என்று நான் கூறினேன். அதற்கவர்கள் அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை. என்றார்கள்.
(நூல்: புகாரி)
இவ்வாறாக உம்ராவையும், ஹஜ்ஜையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டுமே நாடி முகஸ்துதி இல்லாமல் செய்து முடித்திருந்தால் அவருடைய ஹஜ் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாறிவிடுவதோடு அன்று பிறந்த பாலகனைப் போன்று அவர் திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இத்தகைய பாக்கியத்தை குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலேயே அடைய முயல்வோமாக!
மதீனாவுக்குச் செல்வது
ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் சென்று நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஜியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும் என முஸ்லிம்களில் பலர் நம்புகின்றனர். உண்மை என்னவெனில் மதீனா சென்று ஜியாரத் செய்வதற்கும், ஹஜ்ஜுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் இதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
மதீனாவுக்கு செல்வதின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் எனில் வணக்கமாக கருதி அதிக நன்மைகளை நாடி மூன்றே மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதி உண்டு.
1.             மக்காவில் உள்ள கஅபத்துல்லாஹ்
2.             மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவீ
3.             பாலஸ்தீனில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
இதனடிப்படையில் நபியின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் நன்மையை நாடிப் பிரயாணம் செய்யக் கூடாது. ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் மதீனாவில் உள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியான மஸ்ஜிதுன்னபவியில் தொழுவது ஏனைய பள்ளியில் (கஅபத்துல்லாஹ்) நீங்கலாக தொழுவதை விட 1000 மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன்பிறகு நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தையும் மற்ற இடங்களையும் ஜியாரத் செய்யலாம்.
கப்ருஸ்தானத்திற்குள் சென்றால் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(ய்)யத்த.
பொருள்: முஸ்லிம்களான மூஃமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும் அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் (பாவ) மன்னிப்பை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். (நூல்: முஸ்லிம் 1620)
ஜனாஸா தொழுகை தொழும் முறை
உம்ரா மற்றும் ஹஜ் செய்ய செல்வோருக்கு மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு இடங்களிலும் தினமும் கடமையான தொழுகைகளுக்குப் பிறகு ஜனாஸா தொழுகை கிடைக்கும். ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது சமுதாயக் கடமையாகும். அவற்றில் பங்கெடுப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று தொழுகை நடத்தி அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 47)
பிரயாணத்திலிருந்து திரும்பும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பயணத்திலிருந்து திரும்பும் போது பிரயாண துஆ அனைத்தையும் ஓதிவிட்டு அத்துடன்
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
      ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன் என அதிகப்படியாக கூறுவார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2392)

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment