بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முஸ்லிம் அல்லாதோருக்கு எம்எம்ஜே தண்ணீர் கிடைக்க உதவி


                  12.02.2013 அன்று காலை 10.30 மணிக்கு கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள எம்.எம்.ஜே அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பெண்கள் நஜாத் பள்ளிவாசல் பக்கத்தில் சைபுல்லாஹ் ஆபிஸ் உள்ளதாமே.. அவரைப் பார்த்து புகார் செய்யவேண்டும் என்று அருகிலிருந்த ஆட்டோ சங்கத்தினரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஆட்டொ சங்கத் தலைவர் சேக் உதுமான் உடனடியாக எம்எம்ஜே தலைவர் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ்வை தொடர்பு கொண்டு நிலவரத்தைக் கூறினார்கள்.


          எம்எம்ஜே தலைவர் அலுவலகம் வந்த்தும் குழுமியிருந்த பெண்களிடம் நிலவரம் என்னவென்று கேட்டறிந்தார். வந்த பெண்கள் அனைவரும் பின்வருமாறு கூறினார்கள்.
         நாங்கள் கிருஷ்ணாபுரம் மிட்டாதார் ஆபிஸ் தெருவைச் சார்ந்தவர்கள். கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் பகுதியில் குடியிருந்து வருகிறோம். பல வாரங்களாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. ரயில்வே ஸ்டேஷன் அருகில் சென்றுதான் தண்ணீர் பிடித்து பிழைக்கின்றோம். தண்ணீருக்காக மாதாமாதம் ரூ350, ரூ500 செலவு செய்கிறோம்.
         பலமுறை 2வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகச் சாமியிடம் முறையிட்டுப் பார்த்தோம். எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆதலால்தான் இன்று நேரடியாக நகராட்சிக்குச் சென்றோம். அங்குள்ள அதிகாரிகள் எங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. அப்போதுதான் நீங்கள் நேராக நஜாத் பள்ளிவாசலுக்குச் செல்லுங்கள். அங்குள்ள ஆபிஸில் ஸைபுல்லஹ் இருப்பார். போய் சொல்லுங்கள் என்று கூறினார்கள். ஆதலால் இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று முறையிட்டனர்.
          உடனே எம்எம்ஜே தலைவர் நகராட்சி பிட்டரைத் தொடர்பு கொண்டவர் அடுத்து 2வது வார்டு எம்சி ஆறுமுகச்சாமியையும் தொடர்பு கொண்டார். உடனடியாக மிட்டாதார் ஆபிஸ் தெருவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு வந்த எம்சி ஆறுமுகச்சாமியை தண்ணீர் வராமல் பாதிக்கப்பட்ட பெண்கள் சுற்றி வளைத்தனர். அந்த தெருவின் மேல் பகுதிக்கு தண்ணீர் வருகிறது.  எங்களுக்கு வரவில்லை. உடனே எம்சியுடன் வந்திருந்த நகராட்சி ஊழியர் எல்லா வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் கூற்று உண்மை என்பதை உணர்ந்தவுடன் நகராட்சி ஜேஈ அவர்களையும் எம்எம்ஜே தலைவர் சம்பவ இடத்திற்கு வரவழைத்து நிலைமை எடுத்துரைக்கப்பட்டது.             

      பிரச்சனைக்குரிய தீர்வாக கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
1.       கிராம நிர்வாக அலுவலகம் முன்பு 1 வருடத்திற்கு முன்பு மெயின் லைனில் ரிப்பேர் பார்க்கப்பட்டது. அதில் ஏதேனும் அடைப்பு உள்ளதா என்று உடனடியாக தோண்டிப் பார்த்து சரிசெய்ய வேண்டும்
2.       அதுவரை இன்று போல் தண்ணீர் வரும் நாட்களில் வழக்கத்திற்கு மாற்றமாக 2 மணி நேரத்திற்குப் பதிலாக 3 மணி நேரமாக அதிகரித்து குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
       இரண்டையும் உடனடியாக நடைமுறைப்படுத்துகிறோம் என்று நகராட்சி ஜேஈ அவர்கள் உறுதியளித்தார்கள்.
        பல வாரங்களாக குடிநீருக்காக கஷ்டப்பட்ட அந்த தெரு மக்கள் அன்றுதான் தண்ணீர் பிடித்துக் கொண்டனர்.
       எம்எம்ஜேயின் துரித நடவடிக்கையால் உடனடியாக தண்ணீர் கிடைத்தமைக்கு தங்களுடைய நெஞ்சார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment