அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்-மஸ்ஜித் முபாரக் ல் 2012 கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது தாங்கள் அறிந்ததே! இந்த வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி 13.05.2012, ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 க்கு சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் வந்திருந்த சிறார்களுக்கு இதுவரை இப்பயிற்சி வகுப்பில் பயின்ற பாட திட்டத்தின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் படி உபதேசம் வழங்கினார்கள். வழக்கம் போல் 14.05.2012 முதல் காலை, மாலை வகுப்புகள் நடைபெறும். அதில் மாணவ, மாணவியர் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக பயிற்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறார்களும் சான்றிதழ் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.













0 comments:
Post a Comment