அல்லாஹ்வின் கிருபையால், 09.05.2012 (புதன்கிழமை) எம்.எம்.ஜே. தலைவர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் கடையநல்லூர் நகராட்சித் தலைவி ஸைபுன்னிஸா அவர்களை சந்தித்து பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 1. நகரில் நிலவும் அசாதாரணமான சூழலை மாற்றுவதற்கு போர்க்கால அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினசரி கொசு ஒழிப்பு மருந்து நகர் முழுவதும் அடிக்கப்படவேண்டும்.
2. தாமிரபரணி குடிதண்ணீர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோருக்கே டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆதலால் குடிநீரை சுத்தகரித்து வழங்குவதுடன் அதில் கிருமி நாசினி அபேட் மருந்தும் ஊற்றவேண்டும்.
3. ரஹ்மானியாபுரம் 11 மற்றும் 12வது தெரு மக்கள் போக்குவரத்திற்காக உள்ள முடுக்கு தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.
4. தக்வா பள்ளிவாசல் தெருவிலும் குடிநீர் பகிர்மானக் குழாய் மற்றும் தெரு விளக்கு போடவேண்டும்.
போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அனைத்தும் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்றத் தலைவி அவர்கள் உறுதியளித்தார்.
TPC மாநில துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ், மன்சூர், செய்தியாளர் இப்றாஹீம், 19வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

0 comments:
Post a Comment