30.05.2011 தேதி பீ.ஜே. கடிதத்திற்கு எஸ்.எஸ்.யூ. வின் பதில் (Part 6)
Reply Letter from S.S.U. Saifullah Saturday, June 11, 2011 3:07 PM
From: "Saifullah Haja" <ssu_haja@yahoo.com>
To: "P.J." <pjtntj@gmail.com>
Cc:"HO Unarvu" <tntjho@gmail.com>
அன்புள்ள சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
எனது 28.05.2011 தேதியிட்ட மெயில் கடிதத்திற்கு 30.05.2011 அன்று பதில் மெயில் கடிதம் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். உங்களது கடிதத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.
அதாவது 21.05.2011 தேதியிட்டு அபுதாபியிலிருந்து அப்துஸ் ஸலாம் என்பவர் உங்களுக்கு ஈமெயில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை எனக்கு பார்வர்டு செய்து விட்டு ஒரு வாரத்திற்குள் நீங்கள் பதில் தராவிட்டால் இந்த ஈமெயில் கடிதத்தில் சொல்லப்பட்டது உண்மை என்றும் நீங்கள் சொல்வது பொய் என்றும் நாங்கள் முடிவு செய்ய போதுமாகும் என்று உங்களது 22.05.2011 தேதியிட்ட ஈமெயில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அத்துடன் அபுதாபியைச் சேர்ந்த அப்துஸ் ஸலாம் என்பவர் 24.05.2011 அன்று உங்களுக்கு அனுப்பிய இன்னொரு ஈமெயில் கடிதத்தை அதே தேதியில் திருத்தப்பட்ட மெயில் – கூடுதல் விளக்கத்துடன் என்று எனக்கு பார்வர்டு செய்துள்ளீர்கள். அதில் நான் மொத்தத் தொகை குறிப்பிட்டதில் சிறிய தவறு நடந்துவிட்டது. 22 இலட்சம் தவறு. சுமார் 12 இலட்சம் என்பதுதான் சரியானது. தவறான தகவலுக்கு வருந்துகின்றேன் என்று அப்துஸ் ஸலாம் குறிப்பிட்டுள்ளார். அப்துஸ் ஸலாமுடைய இந்த இரண்டு ஈமெயில் கடிதங்களுக்கும் நான் உங்களுக்கு பதில் எழுதும் போது அவ்விரண்டு கடிதங்களுமே ஒன்றையொன்று பொய்ப்பிக்கும் விதமாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன்.
காரணம் 21.05.2011 அவரது ஈமெயில கடிதத்தில் அமீரகத்தில் சுமார் 22 இலட்சம் வசூலிக்கப்பட்டது என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு 24.05.2011 மெயில் கடிதத்தில் 22 இலட்சம் என்று குறிப்பிட்டது தவறு சுமார் 12 இலட்சம்தான் சரி. தவறுக்கு வருந்துகிறேன் என்று சொல்லியிருந்தால் மொத்தத் தொகையில் குறிப்பிடுவதில் தவறு நிகழ்ந்துள்ளது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மாறாக,21.05.2011 ஈமெயில் கடிதத்தில் அமீரகத்தில் சுமார் 22 இலட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 18 இலட்சம் டிஎன்டிஜே பள்ளிவாசல் அடிப்படையில் கிடைத்தது என்றும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் இந்த நோக்கத்திற்காகத்தான் இந்தத் தொகை கிடைத்தது என்பதை சைபுல்லாஹ் உட்பட ஒப்புக் கொண்ட உண்மை (?) என்று அப்துஸ் ஸலாம் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு 24.05.2011 மெயிலில் நான் மொத்தத் தொகை குறிப்பிட்டதில் சிறிய தவறு நடந்து விட்டது. 22 இலட்சம் தவறு சுமார் 12 இலட்சம் என்பதுதான் சரியானது. தவறான தகவலுக்கு வருந்துகின்றேன் என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு 18 இலட்சம் டிஎன்டிஜே பள்ளிவாசல் அடிப்படையில் கிடைத்தது என்பதையும் சைபுல்லாஹ் உட்பட ஒப்புக் கொண்ட உண்மை (?) என்பதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாரே. இதற்கு என்ன பொருள்?
அவர் குறிப்பிட்ட அந்த சுமார் 12 இலட்சம்தான் சரியானது என்பதும் சுத்தப் பொய். குற்றம் சுமத்திய அப்துஸ் ஸலாம் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
19.05.2011 நான் உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்தில் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான இடம் வகைக்கு கடையநல்லூரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் நன்கொடை வசூலித்து ... என்றும் 28.05.2011 நான் உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்தில் நாங்கள் வெளிநாடுகளில் என்ன சொல்லி வசூத்தோம் என்பதற்கு முபாரக் பள்ளிவாசல் சார்பாக 03.07.2009 தேதியிட்டு வளைகுடா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதமே இதற்குச் சான்று (இணைப்பைக் காண்க) என்றும் தான் குறிப்பிட்டுள்ளேன். வெளிநாட்டில் இருக்கின்ற கடையநல்லூர் வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் தங்களுக்கு அறிமுகமானவார்களிடம் முபாரக் பள்ளிவாசலுக்காக நன்கொடை கேட்டுப் பெற்றதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? நான் எந்த வெளியூர் சகோதரரிடமும் முபாரக் பள்ளிவாசல் இடம் வகைக்காக நன்கொடை கேட்டுப் பெற்றதில்லை என்பதே உண்மை.
21.05.2011 அப்துஸ் ஸலாம் அனுப்பிய மெயில் கடிதத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த சகோதரரிடம் சுமார் 1000 திர்ஹம் வசூத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கருப்பா. சிவப்பா என்றே எனக்குத் தெரியாது. இதுவே நான் வெளிநாட்டைச் சேர்ந்தவரிடத்தில் நேரடியாக வசூக்கவில்லை என்பதற்குச் சான்றாகும்.
ஈடிஏ எம்கோ ஜீஎம் இஸ்மாயில் என்பவரிடம் இந்திய ரூபாய் 25 ஆயிரம் வசூத்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் கருப்பா, சிவப்பா என்று எனக்கும் தெரியாது அப்துஸ் ஸலாமுக்கும் தெரியாது. இஸ்மாயீல் என்பருக்குக் கீழ் பணி புரியும் கடையநல்லூரைச் சார்ந்த சாகுல் என்பவர்தான் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான இடம் வகைக்கு நன்கொடை வசூத்தார் என்பதே உண்மை.
இத்திஸாலாத்தில் பணிபுரியும் இஸ்மாயில் என்பவர் அப்துஸ் ஸலாமின் நண்பர். இவர்தான் அவரிடம் 500 திர்ஹம் நன்கொடை வாங்கிக் கொடுத்தார் என்பதே உண்மை.
அபுதாபி ருவைஸ் பகுதியில் இருக்கும் ஷபீக் என்ற சகோதரரிடமிருந்து 500 திர்ஹம் அப்துஸ் ஸலாம் வசூலித்ததாக குறிப்பிடுகிறார். அப்படி ருவைஸ் பகுதியிலுள்ள ஷபீக்கிடமிருந்து அப்துஸ் ஸலாம் மூலம் எங்களுக்கு எந்த வரவும் இல்லை என்பதே உண்மை.
21.05.2011 அப்துஸ் ஸலாம் தன்னுடைய மெயில் கடிதத்தில் சரி பாதி அளவுக்கு அபுதாபியில் அவருடன் பணியாற்றும் சேயன் இல்யாஸ் என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு 28.05.2011 அன்று நான் உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்தில் இல்யாஸ் எங்களுக்கு அனுப்பிய ஆங்கில மெயில் கடிதத்தை பதிலாக அனுப்பியுள்ளேன். இதற்கு 30.05.2011 அன்று பதிலளித்த நீங்கள் அப்துஸ் ஸலாமின் பொய் முகத்தைக் கண்டும் காணாமல் விட்டு விட்டது ஏனோ?
30.05.2011 அன்று நீங்கள் அனுப்பிய மெயில் கடிதத்தில் அப்துஸ் ஸலாம் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த மறுப்பும் விளக்கமும் உங்களிடம் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு குவைத் டிஎன்டிஜே மண்டலத்திலிருந்து 26.05.2011 தேதியிட்டு அவர்கள் உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்தை 30.05.2011ல் எனக்கு பார்வார்டு செய்துள்ளீர்கள்.
முன்னர் 28.05.2011 தேதியிட்டு உங்களுக்கு நான் அனுப்பிய மெயில் நாங்கள் வெளிநாடுகளில் என்ன சொல்லி வசூலித்தோம் என்பதற்கு பதிலாக 03.07.2009 தேதியிட்டு முபாரக் பள்ளிவாசல் சார்பாக வளைகுடா வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதமே இதற்குச் சான்று என்று குறிப்பிட்டுள்ளேன். அதே கடிதத்தைத்தான் வளைகுடாவில் ஒன்றான குவைத் வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கும் அனுப்பினேனேயொழிய முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான இடம் வகைக்கு நன்கொடை வசூலிப்பதற்காக நான் குவைத்திற்குச் செல்லவில்லை என்பதே உண்மை.
26.05.2011 தேதியிட்டு டிஎன்டிஜே குவைத் மண்டலத்திலிருந்து உங்களுக்கு அவர்கள் அனுப்பிய ஈமெயில் கடிதத்தில் ஸைபுல்லாஹ் அவர்கள் குவைத்தில் 3 இலட்சம் மட்டும் தான் வசூல் செய்ததாகவும் அதுவும் டிஎன்டிஜே என்ற பெயரை உபயோகித்து வசூல் செய்யவில்லை என்று சோற்றில் மறைக்க முடியாத அந்த முழு பூசணிக்காயில் அவரின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டதால்தான்... என்று குறிப்பிட்டுள்ளனர். குவைத்தில் நான் எப்போது வசூலித்தேன். யாரிடத்தில் வசூலித்தேன்? எதைச் சொல்லி வசூலித்தேன்? 3 இலட்ச ரூபாய் எதற்காக யாரிடத்திலிருந்து யூசுப் என்பவர் வசூலித்துத் தந்தார்? டிஎன்டிஜே மண்டல நிர்வாகத்தின் சார்பாக எவ்வளவு எனக்கு வசூலித்துத் தந்தார்கள் என்கிற எந்த விபரமும் அதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதே மெயிலில் குறிப்பு : குவைத்திருந்து தொகை முழுவதும் மண்டல நிர்வாகத்தினரின் முழு முயற்சியால்தான் கிடைத்தது. எத்தனை வசூல் செய்தார் என்பது சகோ. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களாக சொல்லும் வரை நாங்கள் ஆதாரத்துடன் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
குற்றம் சுமத்தக்கூடிய டிஎன்டிஜே மண்டல நிர்வாகிகளின் இலட்சணம் இதுதானா? ஒருவரின் மீது குற்றம் சுமத்தும் போது குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை காட்டியல்லவா குற்றம் சுமத்த வேண்டும்? இந்த அடிப்படை அறிவு கூட குவைத் டிஎன்டிஜே மண்டல நிர்வாகிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ? அதை அப்படியே எனக்கு நீங்கள் பார்வர்டு செய்துள்ளீர்கள். இது உங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் உகந்ததுதானா?
21.05.2011 அன்று அப்துஸ் ஸலாம் உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்திலும் குவைத் மண்டல டிஎன்டிஜேவினர் 26.05.2011 அன்று உங்களுக்கு அனுப்பிய மெயில் கடிதத்திலும் என்னை டிஎன்டிஜே மேலாண்மைக் குழு உறுப்பினராகப் பார்த்துத்தான் எல்லோரிடத்திலும் நன்கொடை வசூலித்துக் கொடுத்ததாக குறிப்பிடுகின்றார்கள்.
ஸைபுல்லாவை யாராகப் பார்த்தோம் என்பது முக்கியமா? எதற்காக நன்கொடை வசூக்கப்பட்டது என்பது முக்கியமா? ஸைபுல்லாவை மேலாண்மைக் குழு உறுப்பினராகப் பார்த்ததும் முக்கியம் என்றால் அதனால் அவர் வசூலித்த தொகையை வைத்து வாங்கப்படும் இடம் டிஎன்டிஜே கடையநல்லூர் கிளைக்காக எழுதப்படவேண்டும் என்பதும் முக்கியமென்றால் 2000ஆம் ஆண்டு நான் தமுமுகவினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு துபைக்குப் போய் இஸ்லாமிய கல்லூரிக்காக வசூலித்தது எதனைச் சாரும்?
கடையநல்லூர் மற்றும் சுற்றூர்களிலும் தவ்ஹீத் கொள்கையை நிலை நாட்டிய காலம் சென்ற அப்துல் ஜலீல் மதனீ அவர்கள் உயிருடன் ஆரோக்கியமாக இருக்கும் போதே முஹைதீன் பிச்சை ராவுத்தர் என்பவர் அப்துல் ஜலீல் மதனீ அவர்களையும் எம்.ஏ.முஹம்மது காசிம் அவர்களையும் என்னையும் அழைத்து தனக்குச் சொந்தமான நிலத்தில் 29 செண்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை பள்ளிவாசல், மையவாடி வகைகளுக்காக இலவசமாகத் தருகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு, அப்துல் ஜலீல் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். முபாரக் பள்ளிவாசல் பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டது. மீண்டும் முஹைதீன் பிச்சை ராவுத்தர் அவர்கள் எங்களை அழைத்து தான் முன்னர் சொன்ன இடத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். அதை பதிவு செய்வதற்கான பத்திரச் செலவுக்குரிய தொகையை சரிக்கட்டி பதிவு செய்யும் போது டிஎன்டிஜே கடையநல்லூர் கிளையின் பெயரில் நாங்கள் தான் பதிவு செய்தோம். வயது முதிர்ந்த முஹைதீன் பிச்சை ராவுத்தருக்கு டிஎன்டிஜே பற்றி ஒன்றும் தெரியாது. அப்படியானால் அவர் இலவசமாக தந்த மக்கா நகரில் உள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 29 செண்ட் நிலம் உங்கள் கருத்துப்படி யாரைச் சாரும்?
19.02.2011 உங்கள் தலைமையில் கடையநல்லூர் சேனைத் தலைவர் கல்யாண மண்டபத்தில் டிஎன்டிஜேயின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மர்யம் பள்ளி விவகாரம் குறித்து பேசுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்று டிஎன்டிஜே நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் வழியாக தகவல் தரப்பட்டு முழுக்க முழுக்க முபாரக் பள்ளிவாசல் குறித்தும் என்னைப் பற்றியும் விசாரிப்பதற்காகவே கூட்டப்பட்டது என்பது தனி விசயம்.
காரசாரமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 19.02.2011 பொதுக்குழு கூட்டத்தில் கூட உங்களை மேலாண்மைக் குழு உறுப்பினராகத்தான் துபை போன்ற வெளிநாடுகளில் உங்களைப் பார்த்தார்கள் என்று நீங்களும் அக்கூட்டத்தில் குற்றம் சுமத்தவில்லை. அதே கூட்டத்தில் கலந்து கொண்ட துபை மண்டல தாவா அணிச் செயலாளர் மக்கட்டி முஹம்மது அலி அவர்களும் குற்றம் சுமத்தவில்லை. இது 19.02.2011க்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டே தவிர வேறில்லை.
இப்படித்தான் உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மைக்குப் புறம்பாக உருவாக்கப்பட்டவைகளாகும்.
அல்லாஹ் உண்மையை உணர்ந்து செயல்படுகின்றவர்களாக நம்மை ஆக்கிடப் பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு,
எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ்
0 comments:
Post a Comment