بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜிதுல் முபாரக் பொதுக்குழுக்கூட்டம்

                 அல்லாஹ்வின் கிருபையால், 04.12.2011(சனிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் பொதுக்குழுக்கூட்டம்  தலைவர்  ஷேக் உதுமான்   அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


                 இப்பொதுக்குழுக் கூட்டத்தில் முபாரக் பள்ளிவாசல் பைதுல்மால், நர்ஸரி, முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட இடம், கூட்டுக் குர்பானி ஆகியவற்றின் வரவு செலவுகளும்  மற்றும்  முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வருடாந்திர வரவு செலவுகளும்  அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
                 நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சகோதரர்களில் பலர் தங்களால் இயன்ற நன்கொடைகளை தருவதாக வாக்களித்தனர். சிலர் அவ்விடத்திலேயே நன்கொடைகளை வழங்கினர்.
              11.12.2011 அன்று திருச்சியில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இயன்றவர்கள் இன்ஷா அல்லாஹ் பங்கெடுத்துக் கொள்வது என்றும் தெரிவித்தனர்.






Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment