بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முன்னோர்கள் வாழ்வினிலே (தொடர் 4)

ஜாபிர் (ரலி)யின் விருந்தோம்பல்
                                                                                                     S .S .U . சைபுல்லாஹ் காஜா
நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இது பற்றித் தெரிவிக்க) நபி(ஸல்), அவர்களிடம் சென்று,.இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது'. என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,.நான் இறங்கிப் பார்க்கிறேன்'. என்று கூறிவிட்டு எழுந்தார்கள்.
     அப்போது அவர்களின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள் மூன்று நாள்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் குத்தாலி (axe) எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான்,.இறைத்தூதர் அவர்களே! வீடு வரை செல்ல அனுமதியுங்கள்'. என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம்,.நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை பார்த்தேன்.
           அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?. என்று கேட்டேன். அதற்கு அவள்,.என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது'. என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன்.
              என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியை சட்டியிலிட்டோம். குழைத்த மாவு இளம் (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களலானா அடுப்புக்கு மேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி(ஸல்) அவர்களிடம்  வந்தேன். என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. இறைத்தூதர் அவர்களே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் ஒருவர்... அல்லது இருவர் வாருங்கள்'. என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள்,.(உன்னிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது?. என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை (அதன் அளவை)க் கூறினேன்..இதுவே அதிகம் சிறந்ததும் கூட'. என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள்,.நான் வரும் வரையில் (அடுப்பிலிருந்து) சட்டியை இறக்க வேண்டாம் சட்டியிலிருந்து
ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்'. என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி(ஸல்) அவர்கள்.(எல்லாரும்) எழுந்திருங்கள்'. என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்றபோது,.அடப்பாவமே! நபி(ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரிகளுடனும் வருகிறார்கள்'. என்று கூறினேன். உடனே என் மனைவி.(உணவின் அளவு குறித்து) உங்களிடம் கேட்டார்களா?. என்று வினவியதற்கு நான்,.ஆம்'. என்று பதிலளித்தேன். (நபி- ஸல் - அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,). (வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள்'. என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடி வைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி),.இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்'. என்று கூறினார்கள்.
                                அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம் 4101
                    அன்பார்ந்த வாசகர்களே! வரலாற்றுப் பூர்வமான இந்நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?
              1.அல்லாஹ்வுடைய தூதரும் படைத்தளபதியுமாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அகழ் தோண்டியிருக்கிறார்கள். தங்களுடைய தோழர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடுமின்றி நடந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் சாமான்யமானவர்களா? ஆகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதி தங்களது உயிர்களையே அவர்களுக்காக அர்ப்பணிப்பதற்குத் தயாராகி விட்டவர்களைப் பெற்றவர்கள். இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்கள் சாதாரணமானவர்களாக தானும் அல்லாஹவின் அடிமை என்ற எண்ணம் கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள்.
                 அந்தோ! புரிதாபம் நேற்று வரை பேரூந்து நிலைய ரவுடிகளாய் இருந்தவர்கள் அயோக்கியர்களாக பதவிக்காக எந்த ஈனத்தனமான செயலையும் துணிந்து செய்யும் மனம் படைத்தவர்களாகிய இன்றைய ஆட்சியாளர்களையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அந்தக் காருண்ய நபியவர்களுக்கு இருந்த நிலை இந்த கீழானவர்களுக்கும் இருந்திருந்தால் இந்த நாடும் மக்களும் என்னாவார்கள்.
           2. மிகப்பெரிய பேரரசின் அதிபதி பல நாட்கள் பட்டினியாக இருந்துள்ளார்கள். என்னே அவர்களின் தியாக உணர்வு பிறர் பசித்திருக்க தான் மாத்திரம் உண்பது மனிதப் பண்பல்ல. இந்நாடும் மக்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் இன்றைய தலைவர்கள் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். கொள்கைப் பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த முழக்கமெல்லாம் வெற்று வேட்டுக்கள் என்றாகி விட்டது. சொகுசான ஆடம்பரமான வாழக்ககை நேரம் தவறாமை ருசியான உணவுவகைகள் தங்களது தேவைகளை நிறைவு செய்யப் பல பணியாட்கள் என்னே இவர்களின் அர்ப்பணிப்பு இவர்களல்லவோ ஆளப் பிறந்தவர்கள்
             3. ஒரு தலைவனோ அல்லது ஒரு ஆட்சியாளனோ எப்படி தன் தோழர்களிடத்தில் தம் மக்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள்தான் முன்னுதாரணமாவார்கள்.
               தமது தோழர்கள் அகழ் தோண்டும் போது தென்பட்ட பாறையை உடைக்க இயலாதவர்களாக தம்மிடம் வந்தபோது தமது இயலாமை(பசி)யைக் காரணம் காட்டி அதெல்லாம் முடியாது என்று தட்டிக் கழிக்காமல் உடனே அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துள்ளார்கள்.
அப்பாறையை ஒரே அடியில்; சுக்கு நூறாக்கி விடுகிறார்க்ள. என்னே அவர்களின் அர்ப்பணிப்பு
            4.  நபி (ஸல்) அவர்களின் மீது ஒரு தலைவரின் மீது தோழர்களுக்கு எந்த அளவுக்கு பாசம் இருந்துள்ளது. அவர்களது பசியைப் போக்க ஜாபிர்(ரலி) அவர்கள் மேற்கொண்ட முயற்சியே இதற்குச் சான்று
          5. நபித்தோழர்களின் கட்டுப்பாட்டைப் பாருங்கள். ஒரு தலைவரின் அனுமதியின்றி எங்கும் செல்லாமல் இருந்த அவர்களின் பாங்கு வியக்கத்தக்கதே!
       6. நபித்தோழியர்களும் தங்களைவிட நபி (ஸல்) அவர்களை நேசிப்பதிலும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு ஆர்வத் துடிப்புடன் இருந்துள்ளார்கள்.
          7. ஒரு சிலருக்கு மாத்திரமே போதுமாகக் கூடிய உணவை பெருங்கூட்டம் அதுவும் பல நாட்கள் பட்டினியால் வாடியவர்கள் வயிறு நிரம்பும் அளவுக்கு நபியவர்கள் உண்ணக் கொடுத்துள்ளார்கள். இது அவர்கள் இறைத்தூதர் என்பதற்குரிய சான்றாக விளங்குகிறது.
        8.  அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் தோழர்களுக்கு கட்டுப்பாட்டைப் போதிக்கிறார்கள். நீங்கள் முண்டியடித்துக் கொண்டு நுழைய வேண்டாம் என்று
        9. ஓர் உண்மையான தலைவர் அல்லது தளபதி எப்படியிருக்க வேண்டும் தம்மை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தந்தையைப் போல் இருக்க வேண்டும். நபியவர்கள் தமது கையால் உணவு பரிமாறியுள்ளார்கள். 
வளரும் இன்ஷாஅல்லாஹ்
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment