بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

உங்களது ஃபித்ராவை வழங்கி விட்டீர்களா ?


ஃபித்ரா எனும் தர்மம் இரண்டு நல்ல நோக்கங்களின் அடிப்டிடையில் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. 

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும்இ ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)இ நூல் : அபூதாவூத் 1371இ இப்னுமாஜா 1817

நாம் வாழ்கின்ற கடையநல்லூரில்
 ஃபித்ராவை முறையாக தேவையுடைய மக்களிடம் தேடிச் சென்று பணமாக கொடுக்காமல் உணவுப் பொருட்களாக வழங்கி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொடுக்கின்ற  ஒரு மக்கள் செவையை மஸ்ஜித் முபாரக் கடந்த காலங்களில்  சிறப்பாக செய்து வருவதை நீங்கள் அறீவீர்கள். இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் அதுபோல் சிறப்பாக செயல்படுத்தும்.அதனால் உங்கள் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பதாகவே வழங்கி நோன்பு நோற்றிருக்கும் போது செய்திட்ட சிற் சில தவறுகளை இறைவன் மன்னித்திடுவதற்கு தயாராகுங்கள்.

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503 1509  
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment