அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 29.07.2011 ( வியாழன்) அமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா (KNID) ன் ஆலோசனைக் கூட்டம் அபுதாபியில் சகோ.ரஹ்மதுல்லாஹ் அவர்கள் வீட்டில் இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கடையநல்லூரில் கடந்த வாரம் துவங்கப்பட்ட ஜமாஅத்துல் தஃவத்தி இஸ்லாமியா பற்றி சகோ. சாகுல் விளக்கிக் கூறினார்கள். மேலும் அந்த அமைப்பிற்கு வளைகுடாவில் மண்டல வாரியாக ஒரு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என அதன் முதல் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வின் போது ஆலோசிக்கப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே !. அதன் அடிப்படையில் அபுதாபி மண்டலத்திற்கு சகோ.சுக்கன் முஹம்மது ஷா அவர்கள் ஆலோசகராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அல்ஹம்துலில்லாமஹ்
மேலும் அந்தக் கூட்டத்தில் இனிமேல் எந்த மாநிலம் தழுவிய அமைப்பையும் சாராமல் நாம் செயல் பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக துஆ உடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.







0 comments:
Post a Comment