بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

25-12-2013 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு முன்னரே மாணவர்கள் வரத்தொடங்கினர். நிகழ்ச்சி சரியாக 10.15 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சஹாபாக்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் தொழுகை செய்முறை விளக்கம் மௌலவி எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி அவர்கள் நடத்தினார்கள். பின்னர் தேநீர் வழங்கப்பட்டது.
 அதனை தொடர்ந்து மௌலவி எஸ்.ஏ.பஷீர்அஹமது உமரி அவர்கள் ஜமாஅத்தாக செயல்படுவதின் அவசியம் அதன் பயன் குறித்தும் பின்னர் ஜனாஸாவை குளிப்பாட்டுவது, கஃபனிடுவது குறித்தும் செயல் முறை விளக்கம் அளித்தார். இத்துடன் முதல் அமர்வு முடிந்தது.
 பின்பு லுஹர் தொழுகை முடிந்த பின்பு இரண்டாது அமர்வு உங்கள் கேள்விக்கு எங்கள் பதில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்களின் எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு ஆதாரத்தோடு மௌலவி எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி அவர்கள் பதிலளித்தார்கள் நிகழ்ச்சி சரியாக 2.15 மணிக்கு இனிதே துஆவுடன் நிறைவுற்றது.

 இறுதியாக கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! மஸ்ஜித் முபாரக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில்  அதன் பொறுப்பாளர்களான க.அ.சேகுதுமான், அப்துல் மஜீத், முஹம்மது காஸிம், ரபீக் அகமது கித்வாய், ஜபருல்லாஹ் பத்ரி, முஹம்மது கோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.










Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment