மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக 10.11.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அட்டக்குளத் தெரு கீழ வட்டாரத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அஹமத் உமரி அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் ஒழுக்க மாண்புகள்" என்ற தலைப்பிலும், சகோதரர் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் "முஸ்லிம் என்பவர் யார்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.






0 comments:
Post a Comment