தொகுத்தவர் மௌலவி முஹம்மது இத்ரீஸ் நஜாஹி
(லெப்பைக்குடிக்காடு)
கண்ணியத்திற்கிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் இந்தக் கடமையை நிறைவேற்ற சக்தி பெற்ற அனைவரும் புனித கஅபத்துல்லாஹ்வை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! (அல்குர்ஆன் 22:27)
என இறைவன் தன் அடியார் நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு இட்ட கட்டளையின் பில் அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று காலங்காலமாக இவ்வாலயத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் வணக்கத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
என் இறைவா! நீ எனக்கு சாலிஹான ஒரு மகனைத் தருவாயாக (என்று துஆச் செய்தார்கள்). எனவே நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம். பின்னர் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார். என்அருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்? அதற்கு (அவர் மகன்) கூறினார். என் அருமைத் தந்தையே! நீங்கள் உங்களுக்கு கட்டளையிட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளார்களில் ஒருவனாகக் காண்பீர்கள். ஆகவே அவ்விருவரும் (இறைக்கட்டளைக்கு) முற்றிலும் வழிபட்டு மகனைப் பலியிட கிடத்திய போது நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திட்டமாக நான் (கண்ட) கனவை உண்மைப்படுத்தினார். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு சோதனையாகும். பிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பின்வருபவர்களுக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம் (அல்குர்ஆன் 37:100 Kjy; 108 tiu)
ஹஜ் என்ற வணக்கம் ஹஜ் செய்வர்களுக்கு உரித்தானது அது போல் உலக முஸ்லிம்கள் அனைவரும் குர்பானி எனும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் வணக்கத்தை நிறைவேற்றும் ஈதுல் அல்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றப்படும் அறுத்துப் பலியிடுதல் பற்றிய சட்டங்களை கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
குர்பானி கொடுக்க விரும்புபவர்
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை முடியையும், நகத்தையும் வெட்ட வேண்டாம். என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) நுல் முஸ்லிம் 3655)
குர்பானிப் பிராணிகள் எப்படி இருக்க வேண்டும்
குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் ஆரோக்கியமாகவும் ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகள் உள்ளவற்றைக் குர்பானிக் கொடுக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல் திர்மிதி 1417 அறிவிப்பவர் அல்பரா பின் ஆசிப்(ரலி)
பிராணிகளின் கண்களையும் காதுகளையும் கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபியவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை காது கிழிக்கப்பட்டவை காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவாகள் கட்டளையிட்டார்கள்.
(நூல் அபுதாவுத் 2422 திர்மிதி 1418 )
நபியவாகளின் குர்பானிப் பிராணியாக ஆட்டை எவ்வாறு தேர்வு செய்திருக்கிறார்கள் எனில்
நடக்கக்கூடிய அமரக்கூடிய பார்க்கக்கூடிய உறுப்புகள் ஆகியவை கருமை நிறமுடைய ஓரு ஆட்டை குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் (அவர்கள் கூறிய படி ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றாகள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து (பிஸ்மில்லாஹ் அல்லாஹு அக்பா என்று) அறுத்தார்கள்.
நூல் முஸ்லிம் 3977 அறிவிப்பவர் ஆயிஷா(ரலி)
ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள்
நபி(ஸல்) அவாகள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபு அய்புப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்காகவும் தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார் பிறருக்கும் உண்ணக் கொடுப்பார். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நான் பார்க்கக்கூடிய (பெருமைக்காகப் பிராணிகளை அறுக்கும்) இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவா அதா பின் யஸா(ரலி) நூல் திர்மிதி 1425
குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் தர்மமும் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.
(அறிவிப்பவா அப்துல்லாஹ் பின் வாகித்(ரலி) நூல் முஸ்லிம் 3643)
ஆகவே வசதியுள்ள ஒருவர் பெருமையின்றி அல்லாஹ்வின் திருப்தியை நாடி மக்களின் தேவை கருதி கூடுதலாக குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபியவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்து இருக்கிறார்கள் என்று ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்பதை கவனிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கூட்டுக்குர்பானி
கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ குர்பானியாகக் கொடுக்கலாம்
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல் அபுதாவுத் 2425
எப்போது குர்பானி பிராணிகளை அறுப்பது?
இன்றைய நாளில் நாம் முதலாவதாகச் செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம் யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (பெருநாள் தொழும் முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். அப்போது அபுதாதா இப்னு நியா(ரலி) அவர்கள் (தொழுகைக்கு முன் அறுத்துவிட்டார். அவர் என்னிடத்தில் முஸின்னாவை விடச் சிறந்த ஆறுமாதக் குட்டி ஆடு உள்ளது (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்று நபி (ஸல்) அவாகளிடம் கேட்டார். முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக(அறுப்பீராக) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இவ்வாறு (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அறிவிப்பவர் பரா (ரலி) நூல் புகாரி 5560)
எங்கு அறுப்பது?
ஒருவர் தமது வீட்டிலோ அல்லது ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.
முஸல்லா எனும் திடலில் நபியவர்கள் பலிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தனர்.
(அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் புகாரி 5552)
ஆயிஷாவே கத்தியைக் கொண்டு வா. அதைக் கல்லில் கூர்மையாக்கு எனும் மேற்கூறப்பட்ட ஹதீஸிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
பெண்கள் குர்பானி பிராணிகளை அறுக்கலாமா?
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்தார். இது பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் கஅபு இப்னு மாலிக் (ரலி) நூல் புகாரி 5504
குர்பானி கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள்
துல்ஹஜ் பிறை 10 பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து துல்ஹஜ் பிறை 13 வரை குர்பானி கொடுக்கலாம்.
தஷ்ரீக்குடைய நாட்களான (துல்ஹஜ் பிறை 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ஜுபா இப்னு முத்இம் (ரலி) நூல் தாரகுத்னி பாகம் 4 பக்கம் 284 இப்னுஹிப்பான், அஹ்மத்)
இறுதியாக மேற்கூறப்பட்டவாறு குர்பானியின் சட்டங்கள் அறிந்து நமது குர்பானி கடமையை நிறைவேற்றுவோமாக!
குறிப்பு ஹஜ் செய்ய சென்றவாகள் தவிர்த்து ஏனைய மக்கள் துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோன்பு நோற்குமாறு நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
அபுகதாதா(ரலி) அறிவிக்கிறார்கள்.
(துல்ஹஜ் பிறை 9) அரஃபா நாளன்று நோன்பு வைப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த நோன்பு அதற்கு முன் சென்ற ஓராண்டுப் பாவங்களையும் அதற்கு பின் வரும் ஓராண்டுப் பாவங்களையும் அழித்து விடுகிறது. என பதில் கூறினார்கள். (அறிவிப்பவர் அபு கதாதா (ரலி) நூல் முஸ்லிம் 1976)
0 comments:
Post a Comment