கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில் நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் மூன்று இடங்களில் திடல் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர்.
கடையநல்லூர் தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் சரியாக 6.45 மணி அளவில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். தமது உரையில் இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பற்றி எடுத்துரைத்தார் . இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் தக்வா பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment