கடையநல்லூர் பேட்டை அக்ஸா பள்ளிவாசல் சார்பில் நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர்.
கடையநல்லூர் அக்ஸா பள்ளிவாசல் மைதானத்தில் சரியாக
6.45 மணி அளவில் பஷீர் அஹமத் உமரி அவர்கள்
பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். தமது உரையில் இஸ்லாம் கூறும் இறைக்கோட்பாடுகள் பற்றியும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூரவேண்டும் என்றும் தம் உரையில் எடுத்துரைத்தார் . இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அக்ஸா அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

0 comments:
Post a Comment