இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு மனித உயிர்கள் இழப்பு விகிதமும் வளர்ந்துள்ளது.
பெருநோய்களாலும், இனம் புரியாத வியாதிகளாலும், சாலை விபத்துகளாலும், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவைகளாலும், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் மனித உயிர்கள் பரிபோகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அவசர மருத்துவ உதவியாலும், அறுவை சிகிச்சைகளாலும் இறைவன் அருளால் தப்பிப் பிழைக்கின்றன.இதற்க்கு பெரிதும் துணை நிற்பது நாம் இலவசமாக வழங்கும் இரத்தமே! பலர் தன் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தம் என்ன வகையென்றே தெரியாமல் இருக்கிறனர்.
இதை தவிர்ப்பதற்க்காக மஸ்ஜித் முபாரக் கமிட்டியும், திருநெல்வேலி LIFE LION BLOOD BANK இணைந்து நடத்திய "இலவச இரத்த வகை கண்டறியும் முகாம்" 28.05.2013 செவ்வாய் காலை 10.00 மணி முதல் மெயின் பஜாரில் அமைந்திருக்கும் நஜாஹ் நர்ஸரி&பிரைமரி ஸ்கூலில் வைத்து மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் S.S.U. ஸைபுல்லாஹ் ஹாஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் இரத்த வகையை அறிந்து கொண்டனர். இம்முகாமில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான், செயலாளர் முகம்மது காசிம், ஜபருலாஹ் பத்ரீ, பஷீர் அஹமது உமரீ, முஹிப்புல்லாஹ் உமரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மஸ்ஜித் முபாரக் கமிட்டியும், திருநெல்வேலி LIFE LION BOOLD BANK ம் இணைந்து நடத்தின

















0 comments:
Post a Comment