ஏகத்துவ பிரச்சார மையத்தின் மாநில பொதுக்குழு கடையநல்லூர் தக்வா பள்ளிவாசல் நடைபெற்றது. 14.01.2013 திங்கள்கிழமை அன்று மாநிலத் தலைவர் எம்.ஐ.முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஜமாஅத் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆரவாரமின்றி அழைத்ததும் ஆவலோடு அணி திரண்டனர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்..
இஸ்லாம் மார்க்கத்தில் உயிர் மூச்சு ஏகத்துவம்தான். ஏகத்துவத்தால் இணைந்த உள்ளங்கள் எகத்தாளத்தால் சிதறிப் போய் கிடந்தனர். சாகும் வரை ஏகத்துவத்திலேயே வாழ்ந்து சாகவேண்டுமே என்று ஏங்கினர். எத்தனை மனிதர்கள் இன்னும் ஏகத்துவத்தின் வாடையைக் கூட நுகராமல் உள்ளனர். ஓரிறைக் கோட்பாட்டை சரிவர புரியாததாலும் புரிய வைக்காததாலும் அழிவின் விளிம்பில் உள்ளனர்.
இவர்களுக்கு இன்னும் தூய இஸ்லாம் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லப்படவேண்டும். நரக விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப்படவேண்டும். இப்பணி ஏகத்துவத்தை விளங்கிய நம் ஒவ்வொருவர் மீதும் கடக்ஷமயாகும். அதற்காக நாம் எந்த தியாகத்திற்கும் தயார் என பறைசாற்றுவது போல் இப்பொதுக்குழு அமைந்தது.
மனித சுயமரியாதைக்கு இழிவைவயும் இழுக்கையும் இழப்பையும் பேரழிவையும் தரும் ஏக இறைவனுக்கு இணைவைக்கும் செயலிலிருந்து இச்சமூகத்தை காப்பது, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு. லஞ்சம், ஊழல், மோசடி, மது, மாது போன்ற மனித நாகரீகத்திற்கு சவால் விடும் கொடுமைகளிலிருந்து மீட்டெடுத்து நாகரிகச் சமுதாயத்தை உருவாக்கிய நபிகளார் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மட்டுமே மனித நாகரீகத்தை உருவாக்கப் போதுமானவை.
இப்பேருண்மையை தமிழ் சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மைச் சார்ந்தது. அதை ஏகத்துவ பிரச்சார மையத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் சிறப்பாக செய்யவேண்டும் என்று எல்லோரும் உறுதி பூண்டனர்.
துவக்க உரையாக மவ்லவி இப்றாஹீம் காசிமி அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுக்குழுவிற்கு கடையநல்லூர், லெப்பைக்குடிகாடு, திருச்சி, அடியக்கமங்கலம், காரைக்கால், சங்கரன்பந்தல், புலிவலம், மன்னார்குடி, ராஜகிரி, மேலக்காவேரி, நாகர்கோவில், பொதக்குடி மற்றும் அதிராம்பட்டிணம் போன்ற பல ஊர்களிலிருந்து வந்திருந்த நம் ஜமாஅத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஊர்களில் செய்து வரும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளைப் பரிமாறிக் கொண்டனர். லுஹர் தொழுகைக்குப் பின் மவ்லவி அலி அக்பர் உமரி அவர்கள் மறுமையே இலக்கு என்றும் மன்னார்குடி அமீர் ஹம்ஸா அவர்கள் தூய இஸ்லாத்தை எல்லோரிடத்திலும் எடுத்துச் சொலலும் வழிமுறை குறித்தும் மவ்லவி பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் அழைப்புப்பணியை அவசியமாக்குவோம் என்றும் உரை நிகழ்த்தினர்.
இறுதியில் மவ்லவி எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ஏகத்துவ மையத்தின் எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

0 comments:
Post a Comment