بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசலில் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால், 20.01.2013 ஞாயிறு காலை கடையநல்லூர் பாத்திமா நகர் தக்வா பள்ளிவாசலில் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் கமிட்டி நிர்வாகக் கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் துவக்க உக்ஷர நிகழ்த்தினார். அவர் ஏகத்துவம்தான் நம் ஒவ்வொருவரின் உயிர்த்துடிப்பாக இருக்கவேண்டும். சாகும் வரை ஏகத்துவத்திலேயே வாழ்ந்து சாகவேண்டும். இணைவைத்தலின் சாயல் கூட நம் மீது விழுந்திட அனுமதிக்கக்கூடாது என்று இணைவைத்தல் ஓர் அக்கிரமம். ஏகத்துவம் ஓர் உயிர்துடிப்பு எனக் குறிப்பிட்டார்.
           
                                      
அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் குற்றவாளிகள் நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால் எல்லாம் இழந்த நிலையில் நிற்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக உலகில் வாழ்கிற போது யாரெல்லாம் தங்களுடைய அயோக்கியத்தனங்களுக்கு ஒத்து ஊதினார்களோ அவர்களையெல்லாம் மறுமையிலே தேடுவார்கள். அவர்கள் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இறைவனை மட்டும் நம்பி நல்லவைகளை புரிந்தவர்கள் மட்டுமே நாளை மறுமையில் அல்லாஹ்வால் வழங்கப்படும் சொர்க்கத்தைப் பெறமுடியும் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
          

               

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நம் ஜமாஅத்தின் கீழ் இயங்கும் நஜாஹ் நர்ஸரியில் நடைபெறும் பெண்கள் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க 40 நபர்களில் குலுக்கல் முறையில் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.



நஜாஹ் மதரஸாவில் பயிலும் மாணவர்களில் 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் திருக்குர்ஆன் அத்தியாயங்கங்கள் மனனமாக கேட்கப்பட்டது. அவர்களுக்கும் அதைப் போன்று மாணவிகளில் 10 நபர்களிடம் மனனமாகக் கேட்கப்பட்டது. அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர் அபூஃபஹத் அவர்களும் அப்துல்லாஹ் அபூஃபஹத் அவர்களும் சிறப்புப் பரிசுகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களிடம் இஸ்லாம் குறித்து நேருக்கு நேராக 10 கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக விடையளித்த 10 பேருக்கும் பெண்களிடம் நேருக்கு நேராக 10 கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக விடையளித்த 10 பேருக்கும் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள் அபூஃபஹத் அவர்களும் அப்துல்லாஹ் அபூஃபஹத் அவர்களும் சிறப்புப் பரிசுகள் வழங்கினார்கள்.


விரல் விட்டு எண்ணப்படும் நபித்தோழர்கள் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர். நபித்தோழர்கள் வறுமையில் வாடிய போது பிறருக்கு கொடுத்துதவ வேண்டும் என்ற தயாள குணம் உள்ளவர்களாக வாழ்ந்தனர். பெரும்பான்மையான நபித்தோழர்கள் தங்களை விட பிறருக்கும் பிற நற்காரியங்களுக்கும் கொடுத்துதவும் கொடையுள்ளம் கொண்டவர்களாக இருந்த காரணத்தால் எதிர் பார்க்கப்பட முடியாத அளப்பரிய அறப்பணிகள் நடந்தன. அத்தகைய குணங்களை நாமும் கைக்கொள்ளவேண்டும் என்று மவ்லவி பஷீர் அஹமத் உமரி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.   

லுஹர் தொழுகை முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நம்முடைய சிறப்பு விருந்தினர்களுடைய செலவில் சிறப்பான மதிய உணவு விருந்தாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அத்தனை ஏற்பாடுகள் அனைத்தையும் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.




























Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment