بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜிதுல் முபாரக் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

                            
           அல்லாஹ்வின் பேரருளால் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியின் சார்பாக நல்லொழுக்கப் பயிற்சி (தர்பிய்யா) முகாம் நடைபெற்றது. 16.12.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பண்பொழி அருகில் தோப்பில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர், சிறுமியர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
         இதில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி  அவர்கள் சுத்தம், தொழுகை செய்முறைகளை விளக்கிப் பேசினார். சகோதரர் பசீர் அஹமத் உமரி அவர்கள் ஜனாஸா குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுகை, அடக்கம் செய்தல் போன்றவைகளை விளக்கினார். சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் அவர்கள் நிர்வாகம் மற்றும் மார்க்கம் குறித்து நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். 
             கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி. தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முபாரக் பள்ளி நிர்வாகக் கமிட்டியினர் சிறப்பாகச் செய்தனர். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்...































         
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment