بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மணிக்கூண்டு அருகில் தெருமுனைக் கூட்டம்

                கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக இன்னோசன்ஸ் ஆப் முஸ்லி­ம் என்ற பெயரில் முஹம்மது நபிக்கு எதிராக வலைதளத்தில் குறும்படத்தை வெளியிட்டவனையும் அதை ஆதரிக்கின்ற அமெரிக்காவையும் கண்டித்து நகராட்சி பூங்கா முன் உள்ள மணிக்கூண்டு அருகில் 17.09.2012 (திங்கள்) மாலை சரியாக 7 மணி முதல் 8 மணி வரை தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 

                        இன்னோசன்ஸ் ஆப் முஸ்லி­ம் என்ற குறும்படம் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த நகோலா என்ற இஸ்ரே­ய அமெரிக்கனால் இயக்கப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டது. இதில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான மனித குலத்தின் வழிகாட்டி முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒன்று நடந்ததாக அசிங்கமான முறையிலும் அருவறுக்கத்தக்க முறையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
                       இது உலக முஸ்­ம்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதன் தாக்கம் சூடான், துனீஸியா, இந்தியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், ­பியா. போன்ற நாடுகளில் முஸ்­ம்களை கொதிப்படைய வைத்துள்ளது. ­               
                  லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டு ­பிய அமெரிக்கத் தூதர் உட்பட நால்வர் கொல்லப்ட்டுள்ளனர். இந்திய உட்பட பல நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்களும் துணைத் தூதரகங்களும் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளன. இந்தியாவினுடைய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்யது அக்பருத்தீன் என்பவர் மத நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை இழிவுபடுத்துவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று இந்தியாவின் கண்டனத்தை டெல்­யிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பதிவு செய்தும் உள்ளார். இத்தனைக்கும் பிறகு. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இது தனிமனித கருத்துச் சுதந்திரம் இதில் நாங்கள் தலையிட்டு தடுக்க இயலாது என்று தெரிவித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் உள்ளது.
                   பராக் ஒபாமா அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டனுடன் படுக்கையறையிலேயே சல்லாபித்தார் என்று நடக்காத ஒன்றை தனி மனிதன் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் முஸ்­ம்களில் ஒருவரால் குறும்படம் தயாரிக்கப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்பட்டால் இந்த பராக் ஒபாமா விட்டு வைப்பாரா?
                   உலகில் பல்வேறு பட்ட மத நம்பிக்கையாளர்களும் மத நம்பிக்கையற்றவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது மத நம்பிக்கை காயப்படுத்தப்படுவதை ஒருகாலும் அங்கீகரிக்க இயலாது. எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்­க் கொள்ளக் கூடிய பராக் ஒபாமா உட்பட ஆட்சியாளர்கள் எப்படி இதை அங்கீகரிக்கின்றார்கள். இது போன்ற செயலுக்குச் சொந்தக்காரர்கள் கொலைக்குற்றத்திற்கு உரியவர்கள் என்ற நிலைக்கு ஆளுகின்றவர்கள் வராதவரை அமெரிக்கா போன்ற நாட்டுத் தூதர்களும் பிற அதிகாரிகளும் தாக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என எம்எம்ஜேயினுடைய தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தனது கண்டன உரையில் ஆக்ரோசமாகக் குறிப்பிட்டார்.
   இதில் முபாரக் கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான், செயலாளர் முஹம்மது காசிம், எம்எம்ஜே செயலாளர் முஹம்மது கோரி மற்றும் பஷீர் அஹமத் உமரி, முஹிப்புல்லாஹ் உமரி. டிஎம்.ஜபருல்லாஹ் உட்பட இதில் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கானக்கானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.







                   
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment