بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

உங்களது ஃபித்ராவை வழங்கி விட்டீர்களா ?



பெருநாள் தொழுகைக்கு முன்பதாக ஒவ்வொருவரும் தங்களது ஃபித்ரா தர்மத்தை வழங்கி விட வேண்டும்
               
ஃபித்ரா தர்மம் இரண்டு நல்ல நோக்கங்களின் அடிப்படிடையில் கடமையாக்கப்பட்டுள்ளது.

                   1.நோன்பு நோற்றிருந்த பொழுது நம்மையும் மீறி நாமும் மனிதர்கள் என்ற ரீதியில் செய்திட்ட சிறிய தவறுகள் அது பெரும் பாவங்களாக மாறிடாமல் ஃபித்ரா தர்மம் தடுத்து விடுகிறது.
                2.தினந் தோறும் பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டு தெருத் தெருவாக உணவு கேட்டுத் திரியும் பரம ஏழைகள் பெருநாள் தினத்தன்றாவது நாம் வழங்குகின்ற ஃபித்ரா தர்மத்தில்  நம்மைப் போல் அவர்களும் தங்களுடைய குடும்பத்தார்களுடன் நிம்மதியாக உண்டு புசிப்பதற்கு உதவுகிறது.
                    நீங்கள் வழங்குகின்ற ஃபித்ராவை முறையாக தேவையுடைய மக்களிடம் தேடிச் சென்று பணமாக கொடுக்காமல் உணவுப் பொருட்களாக வழங்கி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொடுக்கின்ற ஒரு பணியை கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் கடந்த பல வருடங்களாக செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள், அது போல் இந்த ஆண்டும் அந்த மகத்தான பணியினை செய்வதற்கு தயாரக உள்ளோம். எனவே உங்களுடைய ஃபித்ரா தொகையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறொம்.
                    அதனால் உங்கள் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பதாகவே வழங்கி நோன்பு நோற்றிருக்கும் போது செய்திட்ட சிற் சில தவறுகளை இறைவன் மன்னித்திடுவதற்கு தயாராகுங்கள். 

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment