எம்.எம்.ஜே. தலைவர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான், செயலாளர் மூ.அ.முஹம்மது காசிம், பொருளாளர் அ.க.அப்துல் மஜீத், எம்.எம்.ஜே செயலாளர் கே.ஏ.முஹம்மது கோரி, பொருளாளர் சே. யஹ்யா, ஏகத்துவ பிரச்சார மைய மாநில துணைத் தலைவர் முஹம்மது ஜபருல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மவ்லவி பஷீர் அஹமத் உமரி, முஹிப்புல்லாஹ் உமரி, பொறியாளர் முஹம்மது ஜபருல்லாஹ், மருத்துவா கண்டாறு ஹாஜா, இப்றாஹீம், அப்துல் ஹமீது, அப்துல் காதர், பைசல் மற்றும் நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில் சகோ. இனாயத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் வருகை தந்த மருத்துவர் மைக்கேல் செயராசு, மருத்துவர் சரவணன், மருத்துவர், சுப்புலட்சுமி மற்றும் உலகத் தமிழ் சித்த மருத்துக் கழகத்தைச் சார்ந்த மருத்துவக் குழுவினர் இம்முகாமில் பங்கெடுத்த நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் என கிட்டத்தட்ட 320 நோயாளிகள் ஊரின் பல பகுதிகளிலிருந்தும் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் சர்வநோய் நிவாரணியான நில வேம்புக் கசாயம் முகாமிலேயே காய்ச்சி வழங்கப்பட்டது. நோயாளிகளின் நோய் தன்மைக்கேற்ப மூன்று நாட்களுக்குத் தேவையான மருந்துப் பொடிகளும் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இம்முகாம் சரியாக 1.30க்கு நிறைவுற்றது. மருத்துவக் குழுவினர் மதிய உணவு உண்ட பின் குழுத் தலைவர் மருத்துவர் மைக்கேல் செயராசு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.
இம்முகாம் சரியாக 1.30க்கு நிறைவுற்றது. மருத்துவக் குழுவினர் மதிய உணவு உண்ட பின் குழுத் தலைவர் மருத்துவர் மைக்கேல் செயராசு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.




































0 comments:
Post a Comment