2012ஆம் ஆண்டு ரமலான் நோன்புக் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்தல், இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் அருளால் சென்ற ஆண்டைப் போல் இவ்வாண்டும் ரமலான் கஞ்சி மற்றும் இதர வகைக்காக குறைந்த பட்சம் ரூ1500 (ஆயிரத்து ஐநுறு) என்றும் நம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மஸ்ஜிதுல் முபாரக், மஸ்ஜிதுர் ரஹ்மான் (சீனா), மஸ்ஜித் தக்வா ஆகிய பள்ளிகளில் நோன்பு திறக்கும் நோன்பாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிப்பது, ரமலான் இரவுத் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக்கிலும் ரஹ்மானிலும் அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக்கிலும் தக்வாவிலும் தொடர் சொற்பொழிவு நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதைப் போல் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் தர்மமாக நபர் ஒன்றுக்கு ரூ70 (எழுபது) என்றும் முழவு செய்யப்பட்டது. அத்துடன் 03.06.2012 ஞாயிறு காலை 9.30 முதல் 12.30 வரை நமது நஜாஹ் நர்சரியில் நடைபெறும் விசக்காய்ச்சல் இலவச தடுப்பு முகாமில் இறைவன் அருளால் நிர்வாகிகள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.









0 comments:
Post a Comment