சினிமா சீரழிவுகளிலும் சங்கங்களிலும் ஆபாச இன்டெர்நெட்டிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினர் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற ஒரு நிகழ்ச்சி கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பில் முபாரக் பள்ளிவாசல் அருகிலுள்ள நஜாஹ் நர்ஸரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
மவ்லவி எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். சகோதரர் மைதின் அவர்கள் துவக்க உரை நிகழ்த்த சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த வள்ளியூர் பெட் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது அவர்கள், சேயன்னா டாக்டர் உதுமான் அவர்கள் ஆகியோர் கல்வி வழிகாட்டுதல் சம்பந்தமாக கருத்துரை வழங்க மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமது உமரி அவர்கள் மாணவர்கள் எவ்வாறு இஸ்லாமிய நெறிகளுடன் கற்கவேண்டும் என்பதை விவரித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஜபருல்லாஹ் பத்ரி, அப்துல் மஜீத். முஹிப்புல்லாஹ் உமரி, முஹம்மது காசிம், அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக முஹம்மது கோரி அவர்கள் நன்றியுரை வழங்க துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முஸ்ம் மாணவ. மாணவியர்களுக்கும் அலுவலகங்களில் பணி புரியும் முஸ்ம்களுக்கும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறக்கூடிய சிறப்பு தொழுகையான ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி வழங்கவேண்டும் என கல்வித் துறையையும் அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஜபருல்லாஹ் பத்ரி, அப்துல் மஜீத். முஹிப்புல்லாஹ் உமரி, முஹம்மது காசிம், அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக முஹம்மது கோரி அவர்கள் நன்றியுரை வழங்க துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
2. பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தென்காசி மேம்பாலத்தை உடனே கட்டித் திறக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
3. பொது இடங்களில் ஆபாச போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என தியேட்டர் நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை செய்ததை மீறி அவர்கள் அந்த போஸ்டர்களை ஒட்டி வருவதால் காவல் துறை அனுமதியுடன் கிழிக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












0 comments:
Post a Comment