அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்தின் கீழ் தக்வா பள்ளிவாசல், முபாரக் பள்ளிவாசல், சீனா பள்ளிவாசல் ஆகிய நிர்வாகங்கள் இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதில் 30.03.2012 அன்று தக்வா பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் சகொ. பஷீர் உமரீ அவர்கள் உரையாற்றினார்கள். இதில் கடையநல்லூர் பகுதிகளில் பரவி வரும் நோய்கள் பற்றியும் அதற்கான தீர்வாக நாம் அனைவரும் வல்ல அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டியதன் அவசியத்தையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.


0 comments:
Post a Comment