கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் சார்பில் இயங்கி வரும் மதரஸத்துன்னஜாஹ் ஆண்டு இறுதி நிகழ்ச்சி முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் 01-04-2012(ஞாயிற்றுக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதரஸாவில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.மேலும் குர்ஆன் மனனம், கேள்வி பதில், துஆ மனனம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மஸ்ஜிதுல் முபாரக் ஜமாத் தலைவர் மௌலவி எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி அவர்கள் இறையியல் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள், செயலாளர் முஹம்மது காசிம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஜஃபருல்லாஹ் பத்ரி, நைனா முஹம்மது, முஹிப்புல்லாஹ், பஷீர் உமரி, முஹம்மது கோரி, கலந்தரி இப்ராஹீம் உள்ளிட்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
மாணவ,மாணவியரும்,பெண்களும், நஜாஹ் நர்ஸரி வளாகத்திலும், ஆண்கள் முபாரக் பள்ளிவாசலின் கீழ்தளத்திலும் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு பயன் அடைந்தனர்.

































































0 comments:
Post a Comment