بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நஜாஹ் நர்சரி பள்ளிக்கூடத்தின் 2ஆம் ஆண்டு இறுதி நிகழ்ச்சி

       கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் சார்பில் இயங்கி வரும் நஜாஹ் நர்சரி பள்ளிக்கூடத்தின் 2ஆம்   ஆண்டு இறுதி நிகழ்ச்சி முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் 08-04-2012(ஞாயிற்றுக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
           முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கூடத்தில்  பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிகழ்சிகளில்   கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


      இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மஸ்ஜிதுல் முபாரக் ஜமாத் தலைவர் மௌலவி எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி அவர்கள் இறையியல் கல்வியின் அவசியம்  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
    நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள்  வழங்கினார்கள்.
  இந்நிகழ்ச்சியில் ஜஃபருல்லாஹ் பத்ரி, முஹிப்புல்லாஹ், பஷீர் உமரி, முஹம்மது கோரி, கலந்தரி இப்ராஹீம் உள்ளிட்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.     
           மாணவ,மாணவியரும்,பெண்களும், நஜாஹ் நர்ஸரி வளாகத்திலும், ஆண்கள் முபாரக் பள்ளிவாசலின் கீழ்தளத்திலும் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு பயன் அடைந்தனர்.













































































Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment