بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் தக்வாவில் ஜும்ஆத் தொழுகை

           அல்லாஹ்வின் கிருபையினால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் தக்வாவில் ஜும்ஆத் தொழுகை 23-03-2012 அன்று நடைபெற்றது சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சின்னஞ்சிறு அமல்களையும் பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

             தனது உரையில் சல்மான் பாரிஸ்(ரலி) யிடம் சில முஷ்ரிக்குகள் வந்து உங்கள் நபி உங்களுக்கு மல, ஜல கழிப்பதைப் பற்றியெல்லாம் கூறுகிறாராமே என்று பரிகசித்து கேட்டனர். அதற்கு சல்மான் பாரிஸ்(ரலி)அவர்களிடம் ஆம் நாங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கக் கூடாது. வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது. தண்ணீர் இல்லாத போது 3 கற்களால் சுத்தம் செய்ய வேண்டும் என எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என கூறினார்கள்.
               இவற்றை கடைபிடிக்கத் தவறிய சில இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பான கழிப்பிட வசதி இல்லாததை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகம் அதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




 
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment