கலந்தர் மஸ்தான் தெரு தென்புறம் அமைந்துள்ள மஸ்ஜித் தக்வாவில் ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. சகோ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் முஸ்லிம்களின் வாழ்வில் நபிவழியின் தாக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் தன் உரையில் நபி(ஸல்) அவர்களுக்கு மது தடுக்கப்பட்டது என கூறியவுடன் நபித்தோழர்கள் மதுவை தெருவில் வெள்ளம் போல் கொட்டினார்கள். இன்னும் இன்றைய இளைஞர்கள் மதுவில் மூழ்கிக் கிடப்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்காக உயிரை விட்ட நபித்தோழர்களையும் தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் நபிகள் நாயகம் காட்டித் தராத செயல்களை செய்து வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.
எனவே நபி(ஸல்) அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள முஸ்லிம்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கவேண்டும் என்று தனது உரையில் கூறியுள்ளார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.







0 comments:
Post a Comment