அல்லாஹ்வின் கிருபையால், 09.03.2012 (வெள்ளிக்கிழமை) மஸ்ஜித் தக்வாவில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக தக்வா பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. ஜூம்ஆ குத்பாவில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உழைத்து உண்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அவர் தன் உரையில் வட்டியினால் முஸ்லிம் சமுதாயம் சீரழிந்து தன் வீட்டையெ பறி கொடுக்கும் அவலத்தை பட்டியலிட்டார். இந்த அவல நிலை மாறவேண்டும் என்றும் மேலும் சமீபத்தில் கசாப்புக் கடைக்காரர் நாய் கடித்த ஆட்டை விற்பனை செய்ததையும் தனது உரையில் எடுத்துரைத்த அவர் இந்த நிலை மாறவேண்டும் என்றால் நம் சமுதாயத்தில் உள்ளவர்கள் நாமே ஆட்டை அறுத்து இறைவனுக்கு பயந்து ஹலாலான முறையில் வியாபாரம் செய்யவேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment