بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

                  மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்,  சார்பாக 28.01.2012  (சனிக்கிழமை)  அன்று  பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கான   இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடையநல்லூர் தக்வா பள்ளிவாச­லில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க. அ.சேகுதுமான்  அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
                இந்நிகழ்ச்சியில் சகோதரர்  முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சொர்க்கம் நரகம்  என்ற தலைப்பில்   உரையாற்றினார்.   மாணவர்கள் பத்ர்,  உஹத்,  கைபர்,  ஹன்தக்  போன்ற  பெயர்களில்  குழுக்களாக  பிரிக்கப்பட்டனர். இக்குழுக்களுகிடையில் இஸ்லாம் குறித்து வினாடி வினா நிகழ்ச்சியை மவ்லவி பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் நடத்தினார்.
                மஸ்ஜிதுல்  முபாரக்  ஜமாஅத்  தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மாணவர்களும் பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.
            லுஹர் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது.








         
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment