மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத், சார்பாக25.122011 (ஞாயிற்றுக்கிழமை)
அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க. அ.சேகுதுமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் இஸ்லாமும்
இளைஞர்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மாணவர்களும் பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.













0 comments:
Post a Comment