ஜமாஅத்துத் தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் சார்பாக 03.09.2011 (சனிக்கிழமை) ரமலான் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடையநல்லூர் தக்வா பள்ளிவாசல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேடிஐ தலைவர் ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜேடிஐ துணைத் தலைவர் முஹம்மது காசிம் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் சேகுதுமான் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அப்துல் பாசித், முஹிப்புல்லாஹ் உமரி மற்றும் முஹம்மது கோரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக ஜேடிஐ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மாணவர்களும் பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.
மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது



0 comments:
Post a Comment