بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முன்னோர்களின் வாழ்வினிலே...! பாகம் 3


பிஸ்மில்லாஹ்
முன்னோர்கள் வாழ்வினிலே
நபித்தோழர்களின் பசியும் நபிகளாரும் (தொடர் 3)

எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி


ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்கள். அது யாரும் வெளியே நபியவர்களை சந்தித்துக் கொள்ளாத நேரமாகும். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்தார்கள். அபூபக்ரே! உம்மை வரச் செய்தது எது? என்று நபியவர்கள் கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரவர்களை சந்தித்து சலாம் கூற வந்தேன் என்று கூறினார்.


இங்கனமிருக்க உமர் (ரலி) அவர்களும் அங்கு வந்து விட்டார்கள். உமரே! (இங்கு) வரச் செய்தது எது? என்றார்கள். பசி அல்லாஹ்வின் தூதரவர்களே! என்றார்கள். உடனே நபியவர்கள் நானும் பசியினால் தான் வந்துள்ளேன் என்றார்கள்.

எல்லோருமாக எழுந்து அபுல் ஹைஸும் பின் அத்தையஹான் (ரலி) என்ற அன்சாரித் தோழருடைய வீட்டுக்குச் சென்றார்கள். அவர் அங்கில்;லை. இவர் அதிகமான பேரீத்த மரங்களும், ஆடுகளுக்கும் சொந்தக்காராவார். ஆனால் இவருக்கு பணியாள் இருந்ததில்லை. இவர்களை கண்ணுற்ற இவரது மனைவி வாருங்கள்! உங்கள் வரவு நல்வரவாகட்டும் என வரவேற்றார்.
உங்களது கணவர் எங்கே போனார்? என நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் கேட்டார்கள். குடிதண்ணீர் கொண்டு வரப் போயுள்ளார் எனக் கூறினார். அந்த நேரத்தில் அபுல் ஹைஸும் (ரலி) அவர்கள் குடிதண்ணீர்க் கோப்பையுடன் வந்து விட்டார்கள். அங்கு நபியவர்களையும் அவர்களின் இரு தோழர்களையும் கண்ணுற்ற இவர் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்று விருந்தினர்களால் என்னைவிட கவுரவிக்கப்பட்டவன் யாருமில்லை என்றார்.

பின்பு தமது தோட்டத்திற்குச் சென்று இவர்களுக்காக செங்காய், பழம், உலர்ந்த பழம் ஆகிய மூன்று வகையான பேரீத்தங் குலையை கொண்டு வந்தார். இதைச் சாப்பிடுங்கள் என்றார். பிறகு கத்தியை எடுத்துக் கொண்டு (தனக்குரிய ஆட்டை அறுக்க) கிளம்பினார். உடனே நபியவர்கள் பால் கொடுக்கும் ஆட்டைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அவர்களுக்காக ஆட்டை அறுத்தார். ஆட்டுக் கறியையும் பேரீத்தங்குலையிலிருந்தும் உண்டார்கள். பருகவும் செய்தார்கள். அவர்கள் வயிறு நிரம்பி தாகமும் தீர்ந்த போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரிடமம் நபியவர்கள் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக மறுமை நாளில் இந்த அருளை (உணவை) பற்றி விசாரிக்கப்படுவீர்கள். உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து பசி வெளியேற்றியது பிறகு இப்பேரருள் உங்களுக்குக் கிடைக்கும் வரை நீங்கள் வீடுகளுக்குத் திரும்பி செல்லவில்லை என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதி)

அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே! இவ்வரலாற்றின் ஊன்றிப் படித்துப் பாருங்கள். என்னே ஆச்சரியம்! வியப்புக்குரிய பல ஆழமான கருத்துக்கள் அதில் நிரம்பி இருக்கக் காண்கிறோம்.

1.நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பசியை உணர்கிறார்கள். அதை தீர்த்துக்கொள்ள ஆகுமான வழியைத் தேடுகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் என்றால் ஊண், உறக்கம் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரல்ல. மனித இயல்பு எவற்றின் பக்கமெல்லாம் தேவையாகுமோ அவற்றின் பால் நபியவர்களும் தேவையானவர்களாக இருந்துள்ளனர்.அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவரும் அவனுக்கு முழுக்கக் கட்டுப்பட்டு அனைத்து நற்காரியங்களைச் செய்கின்றவருக்கும் கஷ்டம், நஷ்டம், துன்பம். துயரம் எதுவும் ஏற்படாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானதே! உலகத்தாருக்கு அருட்கொடையாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்களே இந்நிலைக்கு ஆளாகி இருக்கும் போது அவர்களின் வழியை ஏற்று நடக்கின்ற யாராக இருந்தாலும் நிச்சயம் அது ஏற்படும் என்பது ஐயமற்ற ஒன்றாகும்.

2.ஒரு மனிதன் தனது நண்பருடைய வீட்டுக்கு அவருடைய அழைப்பின்றி விருந்துண்ணச் செல்லலாம். அவர் நல்ல மனம் படைத்தவராக இருக்க வேண்டும் அப்படித்தான் அபுல் ஹைஸும் (ரலி) அவர்களுடைய வீட்டிற்கு நபி (ஸல்) அவர்களுடைய தலைமையில் அபூபக்ர்(ரலி) உமர் (ரலி) ஆகியோர் சென்றுள்ளார்கள். அவரும் தனக்குக் கிடைத்தபெரும் பாக்கியம் என்று கருதி தமது தோட்டத்திற்குச் சென்று தேவையான பேரீத்தம் பழங்களையும் ஆட்டையும் கொண்டு வந்து விருந்து வைக்கிறார்.

3.ஒருவனிடம் வசதி வாய்ப்பு இருக்கும் போது அதை முறையான வழியில் பயன்படுத்திப் பழகிக் கொள்ள வேண்டும். துனக்கு வழங்கப்பட்ட அருளுக்காக அதை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இப்படி நன்றியுள்ளவனாக இருக்கும் போது அல்லாஹ் மென்மேலும் தனது அருளை அதிகப்படுத்துகிறான்.
நீங்கள் நன்றி செலுத்தினால் நான் உங்களுக்கு (எனது அருளை) அதிகமாக்குவேன் (அல்குர்ஆன் 14:7)

4.விருந்தாளி தனது நண்பருடைய அதிகப்படியான உபசரிப்பை பார்க்கும் போது அவர் தவறில் விழுந்து விடுவாரோ என்று அஞ்சினால் அவருக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இங்ஙனம் உபதேசம் செய்துள்ளார்கள். எங்களுக்காக பால் கொடுக்கும் ஆட்டை அறுக்க வேண்டாம் என்று

5.இறைவனுடைய விசாரணை என்பது தீமைகளுக்கு மட்டுமல்ல மாறாக நன்மைகளுக்கும்தான்.

வளரும் இன்ஷாஅல்லாஹ்
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment