بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தெரு முனைப் பிரச்சாரம் & உதவி

                அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், பேட்டை ரஹ்மானியாபுரம் 2வது தெரு மேல வட்டாரத்தில் 29.07.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் ஜமாஅத்துல் தாவத்தில் இஸ்லாமிய்யா சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
                தலைவர் ஜபருல்லாஹ், பாவா, அல்லாபிச்சை, முஹம்மது காசிம், முஹம்மது கோரி நயினாமுஹம்மது, சுல்தான், அலி, அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் சகோதரர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் நோன்பு நோற்பதன் அவசியம் என்ற தலைப்பிலும் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
           நிகழ்ச்சியின் இறுதியில், ரஹ்மானியாபுரம் ஜேடிஐ சகோதரர்கள் மூலம் 20 ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
           ஏராளமான பொதுமக்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
























Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment