முஹிப்புல்லாஹ் உமரீ
அல்லாஹ் உலகிற்கு தூதர்களாக அனுப்பட்ட எல்லோருக்கும் ஒவ்வொரு அற்புதத்தை வழங்கியிருக்கிறான். அதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பல அற்புதங்களை வழங்கியுள்ளான். அதில் பெரியது நபி (ஸல்) அவர்கள் தன் உடலோடும், உயிரோடும் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை புராக் எனும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட நிகழ்ச்சியை இஸ்ரா எனவும் பின்பு விண்ணுலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிகழ்ச்சியை மிஃராஜ் எனவும் கூறுவர். இதனை பற்றி குர்ஆன்,ஹதீஸில் வந்துள்ள செய்திகளை இங்கே காண்போம்.
அல்லாஹ் கூறுகிறான். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 17:1)
நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதுவழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்¡ரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர்(ரலி) புகாரி 349)
புராக் வாகனத்தில் பயணம்:
மக்காவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு புராக் வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்கள்.
... மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமானபுராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன்.
(அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஅஸா(ரலி)புகாரி 3207, 3887)
எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட உருவத்தில் வெள்ளை நிறமுடைய பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும் புராக் எனும் உயரமான ஒரு (மின்னல் வே) வாகனம் அளிக்கப்பட்டேன். அதிலேறி நான் (ஜெருசலத்திலுள்ள இறையாலயம்) பைத்துல் மக்திஸ் வரை சென்றேன்.பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தை கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்தேன்.
(முஸ்லிம் 234, அனஸ்(ரலி)
பின்னர் (பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா(அலை) அவர்கள் நின்ற தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹிம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர் (ஆகிய நான்) தான். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கிக் தெழுகை நடத்தினே;. தொழுது முடித்த போத (என்னிடம்) ஒருவர் முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக் அவருக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று கூறினார். நான் அவரை நோக்கி திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 251)
பைத்துல் மக்திஸ் முதல் விண்ணுலகப் பயணம் வரை:
பிறகு நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்.யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை),ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்.உங்களுடன் (வந்திருப்பவர்) யார்? என்று கேட்கப்பட்டது. அவர்,முஹம்மது' என்று பதிலளித்தார்.அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்டது. அவர்,ஆம்' என்றார்.அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள்,(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! என்றார்கள்.
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம்.யார் அது? என்று வினவப்பட்டது. அவர்,ஜிப்ரீல்' என்று பதிலளிக்க,உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,முஹம்மது' என்று பதிலளித்தார்.(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,ஆம்' என்று பதிலளித்தார்.அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்றார்கள்.
பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம்.யார் அது? என்று கேட்கப்பட்டது.ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத்' என்று பதிலளித்தார்.(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம்' பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம்' என்று பதிலளித்தார். அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.
பிறகு, நான் யூசுப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள்,சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது.ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்? என்று பதிலளிக்கப்பட்டது.(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம்' என்று பதிலளித்தார்.அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள்,சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம்.யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது.(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம்' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார்.அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள்,சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது.ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது.முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது.(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது.அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள்,சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள்.நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்,இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம்.யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது.முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது.(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்' என்றார்கள்.
பைத்துல் மஃமூர்:
பிறகு,அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர்,இதுதான்அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்' என்றார்.
ஸித்ரத்துல் முன்தஹா:
பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள)ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஅஸா(ரலி)புகாரி 3207)
அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம்,நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்' என்று சொல்லப்பட்டது.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 5610)
சுவனம் நரகம்:
நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) நூல்: புகாரி 3241)
அல்லாஹ்வுடன் சந்திப்பு:
இச் சந்திப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ரப்பை கண்கூடாகப் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே ஒரு திரையை ஏற்படுத்தியிருந்தான். அப்போது தான் தொழுகை கடமையாக்கப்பட்டது.
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், என்ன செய்தாய்? என்று கேட்டார்கள். நான் ,என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனு இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள்,என்ன செய்தாய்? என்று கேட்க,அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு,நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்' என்று பதிலளித்தேன். அப்போது (அல்லா';வின் தரப்பிலிருந்து அசரீரியாக),நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன்.என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது.
(அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஅஸா(ரலி) புகாரி 3207)
மிஃராஜில் அல்லாஹ் கொடுத்தது:
ஐவேளைத் தொழுகை மட்டுமின்றி மேலும் சிலவற்றையும் வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விண்ணேற்றப் பயணத்திற்காக) இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வானங்களின் உயரெல்லையில் உள்ள இலந்தை மரமான (சித்ரத்துல் முன்தஹா வரை கொண்டு செல்லப்பட்டார். அதன் அடி முனை ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் யாவும் அங்கு வைத்து ஒப்புக் கொடுக்கப்படுகின்றன. அதன் மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்கு வைத்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுகு;கு மூன்று அருட்கொடைகள் வழங்கப்பட்டன.
1.ஐவேளைத் தொழுகைகள்
2.அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (இரண்டு அல்லது மூன்று) வசனங்கள்
3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுகுப் (பிற) பெரும்பாவங்களுக்கான மன்னிப்பு என்று கூறினார்கள்.
(அப்துல்லா பின் மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 252)
மிஃராஜ் சம்பவத்தை மறுத்த காபிர்கள்:
(நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறை»கள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின். ஹிஜ்ர். என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) நூல்: புகாரி 3886)
இம்மாபெரும் மிஃராஜ் அற்புதம் நடந்தது எந்த வருடம்? எந்த மாதம் எந்த இரவு என்பதில் எண்ணிலடங்கா கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவைகளில் சில
1. ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது.(ஸுஹ்ரி இமாமின் கூற்று நூல்: பைஹகீ)
2. ஹிஜ்ரத்திற்கு 16 மாதம் முன்பு துல்காயிதா மாதம் நடைபெற்றது (இஸ்மாயில் ஸதீ இமாம் கூற்று நூல்: ஹாகிம்)
3. உர்வா, ஸுஹ்ரி போன்றோருடை கூற்று ரபிவுல் அவ்வல் மாதம் நடந்தது.
இது போன்ற எந்தவொரு கருத்துக்களும் ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
மேலும் ரஜப் 27 நாளில் தான் மிஃராஜ் நடந்ததாகவும் அந்நாளில் விசேசமாக ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் சீரியல் பல்புகள் கட்டி தொங்கவிடுவர் இதே போன்று பெண்களுக்கு என்று தனியே கட்டி வைக்கப்பட்டுள்ள தொழுகை கூடங்களிலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இந்நாள் இரவில் சிறப்பு தஸ்பீஹ் தொழுகைகள் 12 ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு மறுநாள் நோன்பு வைப்பார்கள். பூரியான் பாத்திஹாக்கள் எல்லோருடைய வீடுகளில் ஓதப்பட்டு பூரி, ரொட்டி சுட்டு விளம்புவார்கள். இவைகள் எல்லாம் மார்க்கத்தில் அல்லாஹ்வாலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ காட்டித் தரப்படவில்லை என்பதை உணர்ந்து இம்மாபெரும் பித்அத்தான (அனாச்சாரமான) காரியத்திலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும்
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2697)
மிஃராஜின் படிப்பினைகள்
1. அல்லாஹ் தன் அடியார் முஹம்மது (ஸல்) அவர்களை தன் இருப்பிடம் அழைத்து தன் அடியார்களுக்கு கடமையாக்கிய தினமும் ஐவேளைத் தொழுகையை முஸ்லிம்கள் அனைவரும் நிறைவேற்றிட வேண்டும்.
2. நபியவர்கள் காலத்தில் இச்சம்பவத்தை மக்கத்து குரைஷி காபிர்கள் நம்ப மறுத்து போன்று முஸ்லிம்கள் இதனை மறுக்கக் கூடாது.
3. அல்லாஹ்வின் வல்லமையை உணர வேண்டும்.
0 comments:
Post a Comment