அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் அக்ஸாவில் 15.05.2011 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் அக்ஸா பெண்கள் அரபிக் கல்லூரி முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் அக்ஸா பெண்கள் அரபிக் கல்லூரியில் பயின்று வரும் 50 க்கிற்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து மாணவிகள் மட்டுமெ பங்கெடுத்த விறுவிறுப்பான விவாதமும் , சூடான பட்டிமன்றமும் நடைபெற்றது. மாணவிகள் பல்வேறு தலைப்புகள் தயாரித்த கையேட்டுப் பிரதி வெளியிடப்பட்ட்து.
மாணவிகளுக்கான பட்டிமன்றம் :
1. வரதட்சனைக்குப் பெரிதும் காரணம் ஆண்களா ? பெண்களா ? என்ற தலைப்பில் மாணவிகள் மட்டும் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் தலமை தாங்கினார்கள்.
2. கூட்டுத் துஆ கூடுமா ? கூடாதா ? என்ற தலைப்பிலும் மாணவிகள் மட்டும் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு சகோ. யூசுப் பைஜி அவர்கள் தலமை தாங்கினார்கள்.
மேலும் இதில் ஏழை எளியோர் சுய தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக தகுதி வாய்ந்தவர்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்ட்து. மேலும் ஆண்டு இறுதித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் , ஆறுதல் இடங்களை பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்ன.
இறுதியில் கல்லூரி முதல்வர் சகோ.யூசுப் பைஜி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் ஏராளமான பெண்களும் , ஆண்களும், கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
















0 comments:
Post a Comment