அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 13.06.2014 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை ஜாமிஆ நஜாஹ் பெண்கள் அரபிக் கல்லூரி மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் தரைத் தளத்தில் நடைபெற்றது .
நடந்து முடிந்த அரையாண்டுத் தோ்வில் மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் பட்டியல் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. அத்துடன், கல்லூரி முதல்வர் மவ்லவி எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் அவர்கள் மாணவிகளின் தரம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களிடம் சில ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சகோ. மவ்லவி எஸ்.ஏ.பசீர் அஹமத் உமரீ அவர்கள் மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி இந்த கல்வியின் மூலம் மட்டும்தான் மாணவிகள் இம்மை, மறுமையில் வெற்றி பெறுவதோடு நல்லொழுக்கமுடையவர்களாக நடக்க முடியும் என்பதை அழுத்தம் .திருத்தமாக உரையாற்றினார்கள்.

0 comments:
Post a Comment