அல்லாஹ்வின் அருளால்,தக்வா பள்ளி வாசலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி சரியாக 10.15 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் முதற்கட்டமாக சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் எஸ்.ஏ.பஷீர்அஹமது உமரி அவர்களும் உரையாற்றினார்கள். பின்னர் தேநீர் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்ட மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பதிலளித்தார்கள்.
பின்பு உங்கள் கேள்விக்கு எங்கள் பதில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு மௌலவி எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஸி அவர்கள் பதிலளித்தார்கள் நிகழ்ச்சி இனிதே துஆவுடன் நிறைவுற்றது.









0 comments:
Post a Comment