மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக 14.12.2013 (சனிக்கிழமை) அன்று அட்டக்குளத் தெரு கீழ வட்டாரத்திலுள்ள ஓட்டை தஸ்லீம் வீட்டிற்கு முன்னர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இறையச்சம்" என்ற தலைப்பிலும், சகோதரர் ‘அப்துல் ஹமீது பாகவி அவர்கள் "ஈமான் என்றால் என்ன?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.










0 comments:
Post a Comment