வல்ல ரஹ்மானின் பேரருளால், 02.11.2013 காலை 10.30 மணி முதல் லுஹர் வரை மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
பின்னர் உரையாற்றிய மவ்லவி எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் எதிர் காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைக் கூறிவிட்டு அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வு இஷா தொழுகைக்குப் பின்னரும் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விரிவான, தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
0 comments:
Post a Comment