கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் மூன்று இடங்களில் திடல் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை சுப்ஹ‚ முதலே கடையநல்லூர் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி சாரை சாரையாய் வரத்துவங்கினர்.
மஸ்ஜித் முபாரக் அருகிலுள்ள மெயின் பஜார் திடல் சரியாக 6.20 மணி அளவில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ. சைபுல்லா ஹாஜா அவர்கள் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில் ... இப்றாஹீம் நபி அவர்கள் செய்த தியாகத்தையும் அந்த வழியில் நாம் நடக்கவேண்டிய அவசியத்தையும் விளக்கிக் சொன்னார்கள்.
ஹஜ்ஜ‚ப் பெருநாளில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட கூட்டுக் குர்பானியில் முதல் நாளன்று 23 ஆடுகளும் 12 மாடுகளும் அறுக்கப்பட்டன. பங்குகள் முறையாக வழங்கப்பட்டு 300க்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சிகள் வழங்கப்பட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
கடையநல்லூர் பேட்டை பகுதியில் அக்ஸா அறக்கட்டளையின் சார்பில் ரைஸ்மில் திடல் சரியாக 6 : 20 மணிக்கு முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் எஸ்.ஏ.பஷீர் அஹ்மத் உமரி அவர்களும் மேலும் மக்காநகர் ஆயிஷா பள்ளிவாசல் திடல் ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் தியாகம் மற்றும் இறையச்சம் குறித்து எடுத்துரைத்தனர் . கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கடையநல்லூர் நகரக் காவல்துறையினர் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பத்திரிக்கையாளர்களுடன்
0 comments:
Post a Comment