بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

வெளிநாட்டு சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

        அல்லாஹ்வின் கிருபையால்17.08.2013 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் முபாரக் பள்ளி நிர்வாக்க் கமிட்டி தலைவர் க.அ. சேக் உதுமான்    அவர்கள் தலைமையில் வெளிநாடு மற்றும் வெளியுர்களில் வாழும் கடையநல்லூர் சகோதரர்கள் சந்திப்பு  நிகழ்ச்சி  மஸ்ஜிதுல் ரஹ்மானில் (சீனா பள்ளிவாசல்)  நடைபெற்றது . இதில் ரியாத், தம்மாம், ஜித்தா – சவுதி அரேபியா,  கத்தார், ஏமன், மலேசியா, ஷார்ஜா, அமெரிக்கா, குவைத் போன்ற நாடுகளில் பணியாற்றும் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


வெளிநாடுகளில் உள்ள அனைத்துக் கிளை சகோதரர்களையும் ஒருங்கிணைப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
முபாரக் பள்ளிவாசல்  மற்றும் அதன் விரிவாக்கத்திற்கு வாங்கப்பட்ட இடம் குறித்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கயவர்கள் வலைத் தளங்கள் வாயிலாகவும் வாய் வழியாகவும் பரப்பும் வதந்திகள் குறித்தும் அதன் பொய்த்தன்மை குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சகோதரர்கள்  கேட்ட கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்கப்பட்டது.           
வெளிநாட்டில் உள்ள கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கும் தங்களிடம் வந்து சேரும் அவதூறுகளுக்கும் அபாண்டங்களுக்கும் உடனுக்குடன் தக்க பதில் அளிக்கப்படுவதற்காக 9976670014, 9442642030 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.











Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment