بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நோன்புப் பெருநாள் தர்மம்

         



           நாம் வாழ்கின்ற கடையநல்லூரில் ஃபித்ராவை முறையாக தேவையுடைய மக்களிடம் தேடிச் சென்று பணமாக கொடுக்காமல் உணவுப் பொருட்களாக வழங்கி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொடுக்கின்ற மக்கள் சேவையை மஸ்ஜித் முபாரக் கமிட்டி கடந்த காலங்களில் சிறப்பாக செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உங்கள் ஃபித்ரா தொகையை (பெருநாள் தொழுகைக்கு முன்னதாகவே) வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

         அல்லாஹ்வின் கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக கடந்த வருடம் (2012) கடையநல்லூர் மக்கா நகர்,ரஹ்மானியாபுரம், மதினா நகர், பஜார் பகுதி, இக்பால் நகர், மாவடிக்கால், மெஹ்ராஜ் நகர் மற்றும் இடைகால்,வீராணம் போன்ற பகுதிகளில் நோன்பு பெருநாள் தர்மம் 3000 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

         நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி),
நூல்: புகாரி 1509.
   
          நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் - 1371, இப்னுமாஜா - 1817.
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment