மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம்
-----------------------------------------------------------------------
இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு மனித உயிர்கள் இழப்பு விகிதமும் வளர்ந்துள்ளது.பெருநோய்களாலும், இனம் புரியாத வியாதிகளாலும், சாலை விபத்துகளாலும், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவைகளாலும், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் மனித உயிர்கள் பரிபோகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை அவசர மருத்துவ உதவியாலும், அறுவை சிகிச்சைகளாலும் இறைவன் அருளால் தப்பிப் பிழைக்கின்றன.இதற்க்கு பெரிதும் துணை நிற்பது நாம் இலவசமாக வழங்கும் இரத்தமே! பலர் தன் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தம் என்ன வகையென்றே தெரியாமல் இருக்கிறனர். இது ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது.

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இதை தவிர்ப்பதற்க்காக மஸ்ஜித் முபாரக் கமிட்டியும், திருநெல்வேலி LIFE LINE BLOOD BANK இணைந்து நடத்தும் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் வரும் 28.05.2013 செவ்வாய் காலை 10.00 மணி முதல் மெயின் பஜாரில் அமைந்திருக்கும் நஜாஹ் நர்ஸரி&பிரைமரி ஸ்கூலில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறது
மஸ்ஜித் முபாரக் கமிட்டி, மெயின்பஜார், கடையநல்லூர்.

0 comments:
Post a Comment