கடையநல்லூர் மெயின் பஜார் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாத்திமா நகர் தக்வா பள்ளிவாசலில் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமையில் நடைபெற்றது.
"இறைப்பணியின் அவசியம்" குறித்து சகோ. S.A. பஷீர் அஹ்மத் உமரீ அவர்களும், S.S.U. ஸைபுல்லாஹ் காஜா அவர்களும் " முபாரக் பள்ளிவாசலின் அரும்பணிகளும் அதன் அவசியமும் அதை விரிவாக்கம் செய்வதற்கான கட்டாயமும்" குறித்து உரை நிகழ்த்தினார்.
தீர்மானங்கள் :
1) முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கிய இடத்தில் பள்ளிவாசல் கட்டடப்பணிகளை இன்ஷா அல்லாஹ் தொடங்குவது.
2) மே 2013 இறுதிக்குப்பின் அதற்க்கான பொருளை திரட்டுவது.
3) கிட்டத்தட்ட 2500 சதுர அடியில் முதல் தளம் கட்டும் பணிகளைத் தொடங்குவது.
4) ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1100 என்றும் அதற்காக சகோதரர்கள் உதவிட வேண்டும்.
5) ரமலானில் நோன்புக்கஞ்சி மற்றும் இதர வகைக்காக குறைந்த பட்சமாக ரூபாய் 1500 என்றும், ஃபித்ரா ஸதகாவாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 80 என்றும் முடிவு செய்யப்பட்டன.
லுஹர் தொழுகைக்கு பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே.











0 comments:
Post a Comment