அல்லாஹ்வின் பேரருளால் 13-04-2013 அன்று நஜாஹ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
அன்றாடம் தெரிந்து கடைபிடிக்க வேண்டிய துஆக்கள், நாட்டு நடப்புகளைப் பற்றிய இஸ்லாமிய பார்வை, பெற்றோர்களும், பிள்ளைகளும் பிள்ளைகளிடம் பெற்றோர்களும், நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிஞ்சுக் குழந்தைகளின் பங்களிப்பு, நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெற்றோரையும், மற்றோரையும் வியக்க வைத்தன.
கடையநல்லூரிலும், அதன் சுற்று வட்டாரத்தில் எண்ணப்பட முடியாத அளவுக்கு நர்சரிப் பள்ளிகள் இருக்கின்றன. பல முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதோராலும் நடத்தப்படுகின்றன. அத்தனையுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நடத்தப்படுகின்றன.
ஆதலால் தான் பிஞ்சுப்பருவத்துலேயே நஞ்சை விதைக்கின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று தம் பிள்ளைகளை பலர் மத்தியில் ஆடவிட்டு கும்மாளம் போடுகின்றனர் . அதை சீ.டிக்களாக பதித்து பலர் பார்வைக்கு அனுப்பியும் வைக்கின்றனர் . இதை முஸ்லிம் அல்லாதோர் செய்தால் பரவாயில்லை முஸ்லிம்கள் செய்வது தான் வேதனைக்குரியது.
இத்தகைய சூழலில் எந்த ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமின்றி இளம் மாணவ, மாணவியருக்கும், பெற்றோருக்கும், மற்றோருக்கும் பயன் தரத்தக்க வித்தில் அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக எந்தக் குழந்தையும் பிறக்கும் போது நல்ல குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன. அவர்களை நல்லவராக, தீயவராக வளர்ப்பது அவர்களது பெற்றோர்களே என்ற நபிமொழியை கோடிட்டுக் காட்டிப் பேசிய ஒரு குழந்தையின் பேச்சு எல்லோரையும் அதிரவைத்த்து.
பள்ளியில் நடந்த தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அது அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஊக்கமாக அமைந்தன.
மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.கே. அப்துல் மஜீத்,நர்சரியின் தாளாளா மௌலவி எஸ்.எஸ்.யூ.சைபுல்லாஹ் ஹாஜா, மௌலவி டி.ஜபருல்லாஹ், மௌலவி எஸ்.ஏ .பஷீர் உமரி,மௌலவி எம்.முஹிப்புல்லாஹ் உமரி,ரபீக் அஹமது கித்வாய் மற்றும் நர்சரியின் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.



































































0 comments:
Post a Comment