மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி சார்பாக தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருவது தாங்கள் அறிந்த்தே. அதன் தொடர்ச்சியாக 12.04.2013 (வெள்ளிக்கிழமை) அன்று மதினா நகா் அல்அமீன் தெற்கு 3வது தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் "இறைநம்பிக்கையும் நற்செயலும்" என்ற தலைப்பிலும்,சகோதரர் எஸ்.முஹம்மது இத்ாீஸ் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இதில் சிறப்பு என்னவென்றால் ஏராளமான பெண்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து மார்க்க விளக்க பயானைக் கேட்டு தெரிந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.












0 comments:
Post a Comment