கடையநல்லூர் அருகில் உள்ள திரிகூடபுரம், சொக்கம்பட்டியை சார்ந்த அப்துர் ரஹீம் என்ற அறுபது வயதை தாண்டிய முதியவர் தனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துள்ளார். அதன் எதிர் விளைவால் அவருடைய வலது கால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தால் ஒழிய நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
சொக்கம்பட்டியிலுள்ள முஸ்லிம் அல்லாதவரிடம் வட்டிக்கு வாங்கி அறுவை சிகிச்சை செய்துள்ளார். வட்டிக்கு வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் அவரால் திருப்பிகொடுக்க இயலாத காரணத்தால் வட்டிக்கு கொடுத்தவர்களால் அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் சொல்லிக்கொள்ள முடியாத இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் அவர் நம் ஜமாஅதிடம் மனு செய்திருந்தார்.
இது குறித்து வளைகுடாவில் உள்ள நம் சகோதரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . இதற்காக ஒரு சில சகோதரர்கள் அளித்த ரூ 35000 (முப்பத்தைந்தாயிரம்) உதவித் தொகையாக இன்று அவரிடம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment