மஸ்ஜித் முபாரக் அருகிலுள்ள மெயின் பஜார் திடல் சரியாக 6.30 மணி அளவில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ. சைபுல்லா ஹாஜா அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு பெருநாள் ஆற்றிய உரையில் ... ஏகத்துவ இமாம் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக நாம் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவைகளை அறுத்துப் பயிடுகின்றோம். மேலும் இந்நாளில் அனைவரும் வேற்றுமைகளைக் களைந்து உண்மையான முஸ்ம்களாக வாழவேண்டும் என்றும் தனிமனித வழிபாடு கூடாது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இத்தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் பாத்திமா நகரில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசல் திடல் மவ்ல பஷீர் அஹ்மத் உமரி அவர்களும் மேலும் மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசல் திடல் மௌலவி முஹிப்புல்லாஹ் உமரீ அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment